நம்மில் பெரும்பாலானோர் வெளிநாடு செல்ல மிகவும் ஆசைப்படுவோம். ஆனால் நமக்கு வரும் வருமானத்தை வைத்து பார்த்தால் ஃபாரின் டூர் போவதெல்லாம் சாத்தியமற்ற இலக்காக தோன்றும். எனவே அதை பற்றி கற்பனை மட்டுமே செய்கிறோம்.
எனினும் வரும் வருமானத்தை திட்டமிட்டு முறையாக சேமித்து வைப்பது அல்லது முதலீடு செய்வது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டால் வெளிநாடுகளுக்கு செல்லும் கனவை நனவாக்கி கொள்ளலாம். உலகெங்கிலும் ஃபன் செய்வதற்கேற்ற வகையில் அதே சமயம் ஓய்வெடுக்கும் வகையிலும் பல டூரிஸ்ட் ஸ்பாட்கள் உள்ளன. தேசிய பூங்காக்கள், அற்புதமான சுற்றுலா தளங்கள் மற்றும் பழைய நகரங்கள் வரை பல இதில் அடக்கம். நீங்கள் எதிர்காலத்தில் முதல்முறை வெளிநாடு டூர் செல்ல திட்டமிட்டால், போக போகும் நாடுகள் அல்லது அந்த இடத்தின் சிறப்புகள் பற்றி அறிந்து கொள்ள போதுமான நேரத்தை ஒதுக்குங்கள்.
சில ஆவணங்கள் ஒழுங்காக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வெளிநாட்டு பயணத்திற்கு புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட் அவசியம். பின் தேவையான அனைத்து விசா ஸ்டாம்ப்ஸ்களையும் பெறுவதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். செல்லும் நாடுகளில் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதற்கு வங்கிகள் விதிக்கும் convenience fee-ஐ தவிர்க்க, அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் போதுமான அந்நாட்டு கரன்சியை (எக்ஸ்சேஞ்ச் செய்து) கையிருப்பு வைத்திருங்கள். நீங்கள் செல்லவிருக்கும் எந்தவொரு நாட்டின் அல்லது பகுதியின் உள்ளூர் மொழியில் சில அடிப்படை வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களை ஆன்லைனில் தெரிந்து கொள்வதன் மூலம் அங்கே சந்திக்கும் உள்ளூர் மக்களிடம் நன்றாக தகவல்தொடர்பு செய்யலாம், திறம்பட பழக முடியும்.முதல் முறை செல்ல வேண்டிய நாடுகளின் பட்டியல்..
வியட்நாம் : பல அற்புத கடற்கரைகளை கொண்ட ஒரு அழகான நாடு வியட்நாம். பாறை நிலப்பரப்புகள் முதல் வெப்பமண்டல தீவுகள் வரை அனைத்தையும் இந்த நாட்டில் காணலாம். பலவித விசித்திர மற்றும் சுவையான உணவுகளை குறிப்பாக அனைத்து வகை கடல் உணவுகளையும் இந்த நாட்டில் ருசிக்கலாம்.உயர்தர ஹோட்டல்களுக்குப் பதிலாக, குறைந்த விலையுள்ள ஹோம்ஸ்டேகளில் தங்க நீங்கள் தேர்வு செய்தால் உங்கள் ஒட்டுமொத்த பயண செலவு கணிசமாக குறையும்.
இலங்கை : நமது அண்டை நாடான இலங்கை நம்பமுடியாத குறைந்த செலவில் சிறந்த சுற்றுலா மையங்களை கொண்டுள்ளது. இந்த நாட்டில் ஏராளமான உயிரியல் பூங்காக்கள் மற்றும் அழகிய இடங்கள் இருப்பதால், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு இந்நாடு ஏற்றது. இந்தியாவை போலவே இலங்கையும் கலாச்சார ரீதியாக பல வேறுபாடுகள் அடங்கிய சமூகத்தை கொண்டது.
ஜப்பான் : ஜப்பானின் பரபரப்பான நகரங்களுக்கு மத்தியில் இருக்கும் பழங்கால கோவில்கள் மற்றும் ஷின்டோ கோவில்கள் சுற்றுலா பயணிகளுக்கு அமைதியை வழங்குகின்றன. முற்றிலும் வேறுபட்ட மற்றும் மாறுபட்ட ஜப்பான் கலாச்சாரம், தோட்டங்கள் மற்றும் புனித இடங்களை கண்டு டூரிஸ்ட்கள் பிரம்மிப்பார்கள். டீ செரிமனிஸ், ஸ்னோ மங்கிஸ், சுஷி, கிமோனோஸ் மற்றும் கரோக்கி போன்றவற்றை டூரிஸ்ட்கள் என்ஜாய் செய்ய முடியும்.
சீசெல்ஸ் தீவு : இந்த கண்கவர் தீவு இந்தியப் பெருங்கடலில் உள்ளது. வணிக ரீதியாக இன்னும் பெரியளவில் வளர்ச்சியடையாததால் பலருக்கு இந்த தீவை பற்றி தெரியாது. இது மேற்கு இந்தியப் பெருங்கடலில் சுமார் 115 தீவுகளைக் கொண்ட ஒரு தீவு நாடாகும். பல வகையான கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரைகள் உள்ளிட்ட பல இடங்களை கொண்டுள்ளது. கடற்கரையில் பொழுதை போக்க விரும்பும் இந்தியர்களுக்கு சீசெல்ஸ் தீவு சிறந்த இடமாகும். இங்கு விடுமுறையை கழிக்க ரூ.50,000 - ரூ.60,000-க்கு மேல் செலவாகாது.
தெசலோனிக்கி, கிரீஸ் : கிரீஸின் இரண்டாவது நகரமான தெசலோனிகி ஒரு கிரேக்க துறைமுக நகரமாகும். யுனெஸ்கோவின் அங்கீகாரம் பெற்ற உள்ளூர் உணவு காட்சி (local food scene), மீண்டும் திறக்கப்பட்டுள்ள நூற்றாண்டு பழமையான மோடியானோ ஃபுட் மார்க்கெட் உள்ளிட்டவை இங்கே டூர் செல்ல போதுமான காரணம். தீவுகளுக்கு அருகாமையில் இருக்கும் இந்த இடம், அழகான கடற்கரைகளுடன் கூடிய மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாகும். நகரின் மையப்பகுதியை அதன் சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கும் மெட்ரோ பாதை வரும் நவம்பர் 2023-ல் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment