கண்கள்: தெரிந்ததும், தெரியாததும்.. - Agri Info

Education News, Employment News in tamil

January 11, 2023

கண்கள்: தெரிந்ததும், தெரியாததும்..

 மனிதன் சராசரியாக 10 வினாடிகளுக்கு ஒரு முறை கண் சிமிட்டுகிறான். கண்கள் மற்ற உறுப்புகளை விட காயம்பட்டால் விரைவில் குணமாகும் தன்மை உடையது (48 மணிநேரம்) சரியான பராமரிப்பு இருந்தால்... பிறந்த குழந்தைகளுக்கு அதிகம் கண்ணீர் வராது. அது தகவல் பரிமாறுவதற்கே அழுகிறது. கண்ணீர் வருவதற்கு 4-13 வாரங்கள் வரை பிடிக்கும். 

உலகில் 39 மில்லியன் மக்கள் சராசரியாக பார்வையற்றவர்களாக உள்ளனர். கண்களின் கோள வடிவ செல்கள் (ராட் செல்) வடிவத்தையும் கூம்பு வடிவ செல்கள்(கோன் செல்) நிறங்களையும் பார்க்க உதவுகின்றன. உங்கள் கண்களின் அளவு கிட்டத்தட்ட ஒரு அங்குலம் அகலம் கொண்டது. எடை 0.25 அவுன்ஸ்.


சிலர் இயற்கையாகவே ஒரு கண்ணில் ஒரு நிறமும் மற்ற கண் இன்னொரு நிறமுமாக பிறந்திருப்பார்கள். இது ஒருவகை நோய். அதன் பெயர் ஹீடகோமியா. மற்ற தசைகளை விட கண் தசைகள் எந்நேரமும் சுறுசுறுப்பாகவும் விரைந்து இயங்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கின்றன. 

80 சதவிகித கண்நோய்கள் உலகில் தீர்க்கப்படக் கூடியதாகவும் நிவாரணம் பெறக் கூடியதாகவும் உள்ளது. உலகில் பொதுவான கண் நிறம் பிரவுன். கண்களின் நிறம் கருவிழி படலத்தில் உள்ள மெலனினை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. நாம் பிறந்ததிலிருந்து அனைத்து உறுப்புகளும் வளர்கின்றன கண்களை தவிர. 

கண்கள் பிறப்பில் உள்ள அளவுதான் எப்போதும் இருக்கும். கண்கள் திறந்தபடி தும்முவது சிரமமானது; பெரும்பாலும் அப்படி தும்ம முடியாது. தீக்கோழிக்கு அதன் மூளையை விட கண்கள் பெரிதாக இருக்கும். புகைப்பிடிப்பது கண்களைப் பாதிக்கும். 

குறிப்பாக இரவு கண் பார்வையை. பல்லிகள் மனிதனைவிட நிறங்களை அறிவதிலும், இருட்டில் பார்ப்பதிலும் 350 மடங்கு சிறந்ததாக விளங்குகிறது. டால்பின்கள் ஒரு கண் திறந்தபடியே படுக்கும். தேனீக்கு 5 கண்கள் உண்டு. மூளைக்குப் பிறகு சிக்கலான உறுப்பு கண்கள்தான்.

No comments:

Post a Comment