பெருங்காயத்தில் நிறைந்துள்ள மருத்துவப்பயன்கள் - Agri Info

Adding Green to your Life

January 12, 2023

பெருங்காயத்தில் நிறைந்துள்ள மருத்துவப்பயன்கள்

 பல்வேறு மருத்துவப்பயன்கள் நிறைந்த பெருங்காயத்தை'கடவுளின் அமிர்தம்' என்பார்கள். இது சிவப்பு நிறம் கலந்த பழுப்பு நிறம் கொண்டது. பன்றிக் காய்ச்சைல குணப்படுத்த பயன்படும் 'சனாமிர்' மருந்து போல பெருங்காயம் வைரஸ் எதிர்ப்பு தன்மையை கொண்டது என தைவான் ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள். 

தினமும் ஒரு கிளாஸ் மோரில் துளி பெருங்காயம் போட்டு பருகினால் உடல் குளிர்ச்சியாகும். 'லாக்டோபேசில்லஸ்' என்னும் நல்ல நுண்ணுயிரியும் கிடைக்கும். கூடவே பன்றிக்காய்ச்சல் ஏற்படுத்தும் கிருமிகளும் ஓடிவிடும். வாயுவை அதிகரிக்கக் கூடிய வாழைக்காய், கொண்டைக்கடலை, பட்டாணி, மொச்சை முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை சமைக்கும் போது பெருங்காயம் சேர்க்க வேண்டும்.


நெஞ்சு எலும்பின் மையப் பகுதியிலும், அதற்கு நேர்பின் பகுதியிலும் வாயு வலி வந்து இதய வலியோ என பயமுறுத்தும் நோய்க்கு பெருங்காயம் ஒரு பங்கு, உப்பு 2 பங்கு, திப்பிலி 4 பங்கு எடுத்து செம்முள்ளி கீரையின் சாற்றில் அரைத்து மாத்திரைகளாக்கி காலை, மாலை என 7 நாட்கள் சாப்பிட்டால் வாயுக்குத்து நீங்கும். ஆனால் அது ஜீரணம் தொடர்பாக வந்த வலியா என உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம். '
இரிடபிள் பவுல் சிண்ட்ரோம்' என்னும் சாப்பிட்டவுடன் வரும் கழிச்சல், அடிக்கடி நீர் மலமாக போகும் குடல் அழற்சி நோய்க்கும் பெருங்காயம் பலன் தரும்.
 பெருங்காயம் முக்கியமாய் குருதியை சூடாக்கி, நரம்புகளை வெப்பப்படுத்தும். துடிப்பை உண்டாக்கிப் பெண் இச்சைக் கிளர்ச்சியை உண்டாக்கும். 
கக்குவான் நோய்க்கு இதை நீர் விட்டு அரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் குணப்படும். 

பிறந்த குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம் என்னும் நோய்க்கு பால் பெருங்காயத்தை உரசி தாயின் மார்பில் தடவி குழந்தையை பால் உண்ணும் படி செய்தால் நோய் நீங்கும்.

Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment