நடைப்பயிற்சி செய்தால் மாரடைப்பு ஏற்படாதா? எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்? - Agri Info

Adding Green to your Life

January 13, 2023

நடைப்பயிற்சி செய்தால் மாரடைப்பு ஏற்படாதா? எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்?

 

நடைப்பயிற்சி செய்தால் மாரடைப்பு ஏற்படாதா? எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்?

பெரும்பாலான இந்திய மக்களுக்கு மாரடைப்பு பிரச்சனை இருந்து வருகிறது, 50 சதவீதத்திற்கும் அதிகமான இந்தியர்கள் இந்நோயால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.  

இதற்கு காரணம் இந்திய  மக்களிடையே பெரும்பாலும் உடல் செயல்பாடு குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே என்று கூறப்பட்டுள்ளது.  நடைப்பயிற்சி போன்ற எளிய உடல் செயல்பாடுகளின் மூலம் மக்கள் மாரடைப்பு போன்ற பல ஆபத்தான நோய்களிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம்.  60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 6,000 முதல் 9,000 ஸ்டெப்ஸ் வரையிலும் நடப்பதன் மூலம் இதய நோய் (CVD) பாதிப்பை கணிசமாகக் குறைக்கலாம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கிறது.  

அமெரிக்கா மற்றும் 42 நாடுகளில் உள்ள 20,000 பேரை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு நாளைக்கு 2,000 ஸ்டெப்ஸ் நடப்பவர்களுடன் ஒப்பிடும்போது, ​​தினமும் 6,000 முதல் 9,000 ஸ்டெப்ஸ் நடப்பவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதய நோய்க்கான ஆபத்து 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைவாக இருக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.


வேலைக்கு நடந்து செல்வது, அங்கு பெரும்பாலும் நடையை பயன்படுத்துவது போன்றவை செல்வதற்கும் பணிபுரியும் இந்தியர்களின் முக்கியமான உடல் செயல்பாடாக இருந்து வருகிறது.  பணிபுரியும் நேரத்தில் மக்கள் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர் ஆனால் பணிக்கு அதாவது ஓய்வுகாலத்தில் அவர்களின் உடற்செயல்பாடு கணிசமாக குறைந்து விடுகிறது.  ஓய்வுக்கு பிறகு தனிமை, கவனமின்மை, உடல் மற்றும் மன ஆரோக்கியம் போன்றவை எப்படி குறைகிறதோ அதேபோல நமது உடற் செயல்பாடுகளும் குறைந்து பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகிறது.  பெண்களுக்கு உடற்செயல்பாடுகள் குறைவாக இருப்பதாகவே கருதப்படுகிறது.  

பலரும் பெண்கள் வீட்டு வேலைகளின் மூலமாக உடற்செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்று தவறாக கருதுகின்றனர்.  இது ஓரளவிற்கு உண்மையாக இருந்தாலும், முழுமையாக இது உடற்செயல்பாடுகளில் ஈடுபடுவதாக கருதிவிட முடியாது.

இந்தியாவில் கரோனரி ஆர்டரி நோய் (சிஏடி), சர்க்கரை நோய் பாதிப்பு மற்றும் இதயம் தொடர்புடைய நோய்களால் அதிகளவிலான இறப்பு விகிதம் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.  வயதான காலத்தில் உடல்நல குறைவை தவிர்த்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் தினசரி உடற்செயல்பாடுகளை மெதுவாக அதிகரிக்கலாம்.  

இளையவர்களை காட்டிலும் வயதானவர்களுக்கு தான் அதிகளவில் இதயம் தொடர்பான நோய்கள் வருகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.  சிவிடி எனப்படும் இதய தொடர்புடைய நோயானது வயது முதிர்வில் ஏற்படுகிறது.  இதனால் பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகிறது.


No comments:

Post a Comment