Search

குளிர்காலத்தில் தொப்புளில் எண்ணெய் வைத்தால் நல்லது : ஏன் தெரியுமா..?

 நமது உடலில் இருக்கும் தொப்புள் பகுதியில் சுமார் 72,000 க்கும் மேற்பட்ட நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் இருக்கும் இந்த ஆயிரக்கணக்கான நரம்புகளுக்கு மைய புள்ளி தொப்புள் தான். உடல் ஆரோக்கியத்திற்கான பழமையான ஆயுர்வேத நடைமுறையில் தொப்புள் சிகிச்சை முக்கியமான ஒன்று.

உடலில் உள்ள நச்சுக்களை நீக்க, பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க தொப்புள் குழியில் சூடான எண்ணெய் தடவுவது அல்லது ஊற்றுவதை தொப்புள் சிகிச்சை உள்ளடக்கியது. பிறப்பதற்கு முன்பே வயிற்றில் இருக்கும் குழந்தையை தாயுடன் இணைக்கும் தொப்புளில் ஆயில் ஊற்றி மசாஜ் செய்யும் எளிய நடைமுறை உடலின் செயல்பாடுகளை சரியாக பராமரிக்க மற்றும் நோய்களை தடுக்க உதவுகிறது. தொப்புளின் மையப்பகுதி மத்திய நரம்பு மண்டலத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் அங்கு செய்யப்படும் ஆயில் மசாஜ் மனதை தெளிவாக வைக்க மற்றும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும்.

தவிர தொப்புளில் எண்ணெய் வைப்பது சருமத்தை புத்துணர்ச்சியடைய செய்வதோடு செரிமான அமைப்பை சமநிலையாக வைக்கிறது. இரவில் படுக்கைக்கு செல்லும் முன் தினசரி தொப்புளில் எண்ணெய் வைப்பதன் மூலம் எண்ணற்ற நன்மைகளை அடைய முடியும். தொப்புளில் என்னென்ன எண்ணெய் வைத்தால் எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி கீழே பார்க்கலாம்.

செரிமான ஆரோக்கியம்: கடுகு எண்ணெய் அல்லது இஞ்சி எண்ணெய்யை தொப்புளில் ஊற்றி மசாஜ் செய்வது குடலின் செரிமான திறன்களை அதிகரிக்க மற்றும் குடல் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. குடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவதில் சிக்கல் இருந்தால் சரி செய்கிறது. வாயு மற்றும் உப்பசத்துடன் தொடர்புடைய பிரச்சனைகளை நீக்குகிறது. உடலில் ஏற்படும் வீக்கம் குறைக்க மற்றும் ஒழுங்காக செயல்படும் இரைப்பை குடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது.

கருவுறும் விகிதம்: ஆண்கள் தங்கள் தொப்புளில் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் ஊற்றி அடிக்கடி மசாஜ் செய்வது, விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மற்றும் விந்தணுக்களின் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. பெண்களில் இனப்பெருக்க அமைப்பை வலுப்படுத்துவதோடு கருவுறுதல் விகிதத்தை அதிகரிக்கிறது. மாதவிடாய் நேரத்தில் இந்த ஆயில்களை கொண்டு பெண்கள் தொப்புள் மசாஜ் செய்து கொள்வது கருப்பை சுவரைச் சுற்றியுள்ள நரம்புகளை தளர்த்தி வலியை குறைக்கிறது

பார்வை திறன் மேம்பட... பாதாம் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை தொப்புளில் வைப்பது பார்வை நரம்புகளின் மீது செயல்பட்டு பார்வை திறனை மேம்படுத்துகிறது. கண்களைச் சுற்றியுள்ள வீக்கம் மற்றும் பிக்மென்டேஷனை இந்த ஆயில் மசாஜ் குறைக்கும். தொப்புளில் எண்ணெய் தடவுவது கண்களை பாதுகாப்பதோடு, பார்வை குறைபாட்டிற்கு காரணமாக இருக்கும் அதிகப்படியான வறட்சியை தடுக்கிறது

சரும ஆரோக்கியம்: வேப்ப எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், கடுகு எண்ணெய், தேயிலை மர எண்ணெய், லெமன் எசென்ஷியல் ஆயில் அல்லது ரோஸ்ஷிப் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய எண்ணெய்களை தொப்புளில் வைப்பது எண்ணற்ற சரும ஆரோக்கியங்களை அள்ளி தரும். பிக்மென்டேஷனை குறைக்க, சரும வறட்சியை தடுக்க, ஹைட்ரேஷனை பராமரிக்க, இயற்கையான சரும பளபளப்பை பெற இந்த எண்ணெய்களை தொப்புளில் பயன்படுத்தலாம். தவிர முகப்பருக்களை தடுக்க, உடலில் உள்ள கறைகளை நீக்க, ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவுகின்றன.

மூட்டு வலிக்கு... தவறான உடல் தோரணை, மருத்துவ நிலை அல்லது மசில் டென்ஷன் காரணமாக உடல் மற்றும் மூட்டு வலிகளால் அவதிப்படுபவர்கள் எள் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் அல்லது ரோஸ்மேரி எண்ணெயை தொப்புள் சிகிச்சையில் பயன்படுத்தலாம். இதனால் வலிகளில் இருந்து நிவாரணம் கிடைப்பதோடு வீக்கமும் குறையும்.


0 Comments:

Post a Comment