டீ பிரியர்களை போலவே ‘காபி’ பிரியர்களும் அதிகளவில் உள்ளனர். காலையில் எழுந்து சூடாக ஒரு காபியை குடிக்கவில்லை என்றால், அந்த நாளே அவர்களுக்கு போகாது. காபி குடிப்பதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க முடியும். இந்த நிலையில் தொடர்ந்து பிளாக் காபி குடிப்பதால் உடல் எடை குறையும் என “ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்” அண்மையில் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர். பிளாக் காபி என்றால், காபி தூளுடன் வெறும் சூடு தண்ணீர் மட்டும் கலந்து மிதமான சூட்டில் குடிப்பதாகும். விருப்பப்பட்டால் தேன் சேர்த்து கொள்ளலாம்.
இந்த பிளாக் காபியை தினமும் நான்கு கப் காபி குடித்தால் உடலில் உள்ள கொழுப்புகள் சுமார் 4 சதவீதம் வரை குறையும் என கூறப்படுகிறது. பிளாக் காபி குடிப்பதால் உடல் எடை குறைக்க என்ன காரணம் என இங்கு தெரிந்து கொள்வோம்.,
குறைவான கலோரி : பொதுவாக காபி என்பதை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று நிலக்கடலையில் இருந்து தயாரிப்பது, மற்றொன்று எஸ்பிரெசோவின் திரவ அவுன்ஸ் ஆகும். இதில் எஸ்பிரெசோவின் திரவ அவுன்ஸ் மூலம் தயாரிக்கப்படும் காபியில் உள்ள கலோரியின் அளவு ‘1 கலோரி’ ஆகும். நிலக்கடலையில் இருந்து தயாரிக்கும் காபியில் ‘2 கலோரி’ உள்ளது. காஃபினேட்டட் பீன்ஸினை பயன்படுத்தும் போது அதன் கலோரி அளவு பூஜ்ஜியமாகிறது. எனவே நாம் பூஜ்ஜிய கலோரி கொண்ட காபியினை எடுத்துக் கொள்ளும் போது எளிதாக உடல் எடையை குறைக்கலாம்.
குளோரோஜெனிக் அமிலம் : கருப்பு காபியில் ‘குளோரோஜெனிக்’ என்ற அமிலம் உள்ளது. இது உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது. இது இரவு உணவு அல்லது இரவு உணவிற்குப் பிறகு உடலில் உள்ள குளுக்கோஸ் உற்பத்தியை தாமதப்படுத்துகிறது. மேலும் புதிய கொழுப்பு செல்களின் உருவாக்கத்தையும் குறைக்கிறது.இதனால் உடலுக்கு மிகவும் குறைந்த கலோரி மட்டுமே கிடைக்கும்.
ஃபோர்டிஸ் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் சிம்ரன் சைனி இது பற்றி கூறும் போது, ‘காபியில் உள்ள குளோரோஜெனிக் அமிலம் ஆன்டி ஆக்ஸிடன்ட்டாக செயல்படுகிறது. இது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. உடல் எடை இழப்புக்கு உதவுகிறது. அதோடு உடலில் இரத்த சர்க்கரை அளவையும் பராமரிக்கிறது.
பசியை கட்டுப்படுத்துவது : காபியின் மூலப்பொருளான “காஃபின்” , இது நம் உடலில் பல்வேறு மாற்றங்களை உண்டாக்குகிறது. இது நமது மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. அதேநேரத்தில் அதிகப்படியான பசியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதனால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
கொழுப்பை குறைக்க : பச்சை காபி பீன்ஸ் ஆனது நம் உடலில் உள்ள கொழுப்புகளை எரிக்க உதவுகிறது. இது உடலில் கொழுப்புகளை எரிக்கும் நொதிகளை அதிகமாக வெளியிட உதவுகிறது. கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. நம் உடலில் உள்ள தேவையில்லாத கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் மிதமிஞ்சிய கொழுப்புகளை நீக்குகிறது. வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை எரிக்க உதவுகிறது.
நீர் : பிளாக் காபி உடலில் இருந்து அதிகப்படியான நீரை அகற்ற உதவுகிறது. இதனால் எந்த ஆபத்தான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் எடை இழப்புக்கு உதவுகிறது. காபி மூலம் உடல் எடை குறைதல் தற்காலிகமான ஒன்றாகும். காபியை வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும் குடிக்காமல், இனி உடல்நலத்திற்காகவும், உடல் எடை குறைப்புக்காகவும் குடிக்கலாம்.
No comments:
Post a Comment