உடல் பாகங்களை ஒத்திருக்கும் உணவுப்பொருட்கள்... - Agri Info

Adding Green to your Life

January 22, 2023

உடல் பாகங்களை ஒத்திருக்கும் உணவுப்பொருட்கள்...

 உடல் உறுப்புகளுக்கும், சாப்பிடும் சில உணவு பொருட்களுக்கும் இடையே நெருக்கமான ஒற்றுமை இருக்கின்றன. அவை ஒரே மாதிரியான தோற்றத்துடன் காணப்படுகின்றன. அவைகளை சாப்பிடுவது குறிப்பிட்ட அந்த உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு மேலும் நன்மை பயக்கும். உடல் பாகங்களை ஒத்திருக்கும் சில உணவுகள் குறித்து பார்ப்போம்.


1. கண்-கேரட் 

வட்ட வடிவத்தில் சிறு துண்டுகளாக வெட்டப்பட்டிருக்கும் கேரட், மனிதனின் கண் போல் இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? 

கூர்ந்து பார்த்தால் கேரட், கண்களின் உள் அடுக்குகளை ஒத்திருப்பது தெளிவாக தெரியும். 

கேரட், அதில் இருக்கும் பீட்டா கரோட்டின் என்ற தாவர ரசாயனத்தில் இருந்து ஆரஞ்சு நிறத்தை பெறுகிறது. இந்த பீட்டா கரோட்டின் கண்புரை உருவாகும் அபாயத்தை குறைக்கிறது. தெளிவான கண் பார்வையை பராமரிக்கவும் உதவுகிறது. 


2. இதயம்-தக்காளி 

இதயத்தை போல் சிவப்பு நிறம் கொண்ட தக்காளி, இதயத்தின் உள் அமைப்பை போலவே நான்கு அறைகளை கொண்டது. 

தக்காளியில் இருக்கும் லைகோபின், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும். இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமான வைட்டமின் சி, தக்காளியில் நிறைந்திருக்கிறது. உயர் ரத்த அழுத்த பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகள் தக்காளி சாப்பிடலாம். 

3. அல்வியோலி-திராட்சை 

நுரையீரலின் கட்டமைப்பு சிறிய காற்றுப்பாதைகளை கொண்ட கிளைகளை உள்ளடக்கியது. அவை அல்வியோலி எனப்படும் திசுக்களால் ஆனவை. இது பார்ப்பதற்கு திராட்சை கொத்து போல காட்சியளிக்கும். இந்த கட்டமைப்புதான் நுரையீரலில் இருந்து ஆக்சிஜனை ரத்த ஓட்டத்திற்கு எடுத்து செல்ல அனுமதிக்கின்றன.

 திராட்சை பழம் அதிகம் சாப்பிடுவது நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும். திராட்சை விதைகளில் புரோஆந்தோசையானிதின் என்ற வேதிப்பொருளும் உள்ளது. இது ஒவ்வாமை காரணமாக ஏற்படும் ஆஸ்துமா பிரச்சினையை குறைக்க உதவும்.

4. சிறுநீரகம்-கிட்னி பீன்ஸ் 

பீன்சின் பெயர் முதல், வடிவம் வரை அனைத்தும் சிறுநீரகங்களை ஒத்திருக்கும். சிறுநீரக கற்களைத் தடுப்பதற்கு கிட்னி பீன்ஸ் சிறந்த உணவாக கருதப்படுகிறது. சிறுநீரகங்களின் சீரான செயல்பாட்டுக்கும் துணைபுரியும். மேலும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும், மலச்சிக்கலை தடுக்கவும் உதவும். 

5. கருப்பை-அவகொடா 

கருப்பையின் வடிவத்தை போலவே அவகொடா பழத்தின் உள் பகுதியும், விதையும் அமைந்திருக்கும். கருப்பை மற்றும் கருப்பை வாய் பகுதியின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு அவகொடா உதவும். வாரம் ஒருமுறை அவகொடா சாப்பிடுவது பிறப்பு ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவும். கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்கவும் துணைபுரியும்.

6. மூளை-வால்நட் 

வால்நட்டின் உள்பகுதி பார்ப்பதற்கு மூளை போலவே காட்சியளிக்கும். பெருமூளை மற்றும் சிறுமூளையில் காணப்படும் சுருக்கங்கள், மடிப்புகளையும் ஒத்திருக்கும். மூளைக்குள் மூன்று டஜன் நியூரான்-டிரான்ஸ்மிட்டர்களை உருவாக்க வால்நட் உதவும். மேலும் வால்நட்டில் இருக்கும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாட்டை துரிதப்படுத்தவும் செய்யும். 

7. கணையம்-சர்க்கரைவள்ளிக் கிழங்கு 

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்றியாகும். இது கணையம் உள்பட உடலில் உள்ள அனைத்து திசுக்களையும் புற்றுநோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டது.

8. வயிறு-இஞ்சி 

இஞ்சியின் வடிவம் வயிற்றின் குடல் பகுதியை ஒத்திருக்கும். பெருங்குடல் பாதிப்பு, வயிற்றுபோக்கு, வாயு பிரச்சினை, குமட்டல், பசியின்மை உள்பட பல்வேறு வகையான வயிற்று பிரச்சினைகளுக்கு இஞ்சி நிவாரணம் தரும். செரிமானத்திற்கு உதவுவதில் இஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியர்களும், சீனர்களும் 5000 ஆண்டுகளுக்கும் மேலாக வயிறு சார்ந்த பிரச்சினைகளுக்கு இஞ்சியை அருமருந்தாக பயன்படுத்தி வருகின்றனர். 

9. காது-காளான் 

காளானை இரண்டாக வெட்டினால் காதுகளை போலவே காட்சியளிக்கும். காளான்கள் செவிப்புலன் திறனை மேம்படுத்த உதவுகின்றன. அவற்றில் இருக்கும் வைட்டமின் டி, செவிப்புலன் இழப்பை தடுக்க உதவும். எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். 

10. புற்றுநோய் செல்கள்-புரோக்கோலி 

புரோக்கோலியின் தலைப்பகுதி புற்றுநோய் செல்களின் தோற்றத்தை ஒத்திருக்கும். புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தை 45 சதவீதம் குறைக்கும் தன்மை கொண்டது. சிறுநீர்ப்பை புற்றுநோயை தடுக்கவும் புரோக்கோலி சாப்பிடலாம்.

No comments:

Post a Comment