தேசிய சுகாதார ஆணையம் (National Health Authority) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Director மற்றும் Junior Director பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேசிய சுகாதார ஆணைய பணியிடங்கள்:தேசிய சுகாதார ஆணையத்தில் (NHA) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.Director – 02 பணியிடங்கள்Junior Director – 03 பணியிடங்கள்.
Director / Jr. Director தகுதிகள்:
இந்த மத்திய அரசு நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், யூனியன் பிரதேச நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் போதிய ஆண்டு காலம் பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Director / Jr. Director வயது விவரம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
Director / Jr. Director சம்பள விவரம்:Director பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level – 13 என்ற ஊதிய அளவின் படி, மாத ஊதியம் பெறுவார்கள்.Junior Director பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level – 12 என்ற ஊதிய அளவின் படி, மாத ஊதியம் பெறுவார்கள்.
NHA தேர்வு முறை:
இந்த NHA நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள்.
NHA விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அறிவிப்பு வெளியான நாள் முதல் அதற்கு பிறகு வரும் 45 நாட்களுக்குள் தபால் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment