அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்கி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, தற்போது பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெற உதவும், Aspiring Minds Computer Adaptive Test என்ற பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்பில் இறுதியாண்டு பயில்வோர் இந்தப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.
3 மாதங்கள் வழங்கப்படும் இந்த பயிற்சிக்கான அனைத்து செலவையும் தாட்கோ வழங்கும். பயிற்சி முடித்து, தேர்வில் பங்கேற்று வெற்றி பெறுவோருக்கு AMCAT சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளோர், தாட்கோவின் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம்.
No comments:
Post a Comment