'கிராமர்' (இலக்கணம்) என்பதிலேயே முக்கியத்துவம் கொடுக்காமல், ஆங்கிலத்தை மிக சுலபமாகவும் கற்கலாம்.
ஆங்கில திரைப்படங்களை சப்டைட்டிலுடன் பாருங்கள். இசை ஆல்பங்களை பாடல்வரிகளுடன் இசையுங்கள். இதுவும் கற்றல்தான்.
மொழி கற்பது எந்த தேவைக்காக என்பதை முடிவு செய்துவிட்டு உணவு, பயணம், இலக்கியம் என விருப்பம் எதுவோ அதுதொடர்பான வார்த்தைகளைக் கற்கலாம்.
கற்றது வரையில் மொழியை உரையாடிப் பழகுங்கள். பட்லர் இங்கிலீஷ், தரம் பற்றி மனம் குமையாமல் கற்பது அவசியம்.
மொழியைக் கற்க குழுவாக முயற்சிக்கிறீர்களா? அல்லது தனியாக படிப்பதே சந்தோஷமா என்பது உங்களின் சாய்ஸ்தான்.
முடிந்தவரை எளிதில் இலவசமாகக் கிடைக்கும் வசதிகளைப் பயன்படுத்துங்கள்.
பிறருடன் பேசிப் பழகினால் மட்டுமே மொழியைப் பேசுவதில் பாஸ் மார்க் வாங்கமுடியும். மொழியைப் பேச முயற்சிக்கும் முன் 90 சதவிகிதம் அந்த மொழியை காது கொடுத்து கேளுங்கள்.
சரளமாக பேசுவது என்பது உங்களது தேவை சார்ந்தது. மொழியைக் கற்கையில் சின்ன சின்ன பயிற்சிகளையும், அதில் கிடைத்த வெற்றிகளையும் கொண்டாடிவிட்டு, அடுத்த பகுதியை உற்சாகமாகப் படியுங்கள்.
No comments:
Post a Comment