சென்னை: 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு இந்திய ராணுவம், விமானப்படை, கப்பற்படை உள்ளிட்ட தேசத்தின் பாதுகாப்புத்துறையிலுள்ள வேலைவாய்ப்புகளை அறியச் செய்யும் நோக்கில் ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘தேசம் காக்கும் நேசப் பணிகள்’ எனும் வெப்பினார் தொடர் நிகழ்வை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிகழ்வில் சாய்ராம் கல்வி நிறுவனமும், ஆர்.எம்.கே. கல்வி நிறுவனமும் இணைந்திருக்கின்றன.
இந்த இணையவழி தொடர் நிகழ்வின் 5 மற்றும் 6-ம் பகுதிகள் வரும் ஜன. 26, 29-ம் தேதிகளில் நடைபெறவுள்ளன. இந்த நிகழ்வில் துறை சார்ந்த சிறப்பு வல்லுநர்கள் பங்கேற்று, அத்துறைகளிலுள்ள வேலைவாய்ப்புகளைப் பற்றி கலந்துரையாடவுள்ளனர்.
நாளை (ஜனவரி 26,) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள வெப்பினாரில், இந்திய கடற்படையின் ஓய்வுபெற்ற கமாண்டர் எஸ்.நவநீத கிருஷ்ணன், ‘இந்திய கடற்படையில் உள்ள வேலை வாய்ப்புகள்’ எனும் தலைப்பில் உரையாற்ற உள்ளார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.29) மாலை 4 மணிக்குநடைபெறவுள்ள வெப்பினாரில், இந்திய கடலோர காவல்படை கமாண்டண்ட் ஏ.சோமசுந்தரம், ‘இந்திய கடலோர காவல்படையிலுள்ள வேலைவாய்ப்புகள்’ எனும் தலைப்பில் உரையாற்ற உள்ளார்.
இந்த இரு வெப்பினார் நிகழ்வுகளையும் ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு ஒருங்கிணைத்து, கலந்துரையாட வுள்ளார்.
இந்நிகழ்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் https://www.htamil.org/DKNP03 என்ற லிங்கில் பதிவு செய்து கொள்ளுங்கள். இந்நிகழ்வில் பங்கேற்க முதலில் பதிவு செய்யும் 10 மாணவர்களுக்கு டாக்டர் வி.டில்லிபாபு இணைந்து எழுதிய நூல் பரிசாக வழங்கப்படும். மேலும் பங்கேற்கும் அனைத்து மாணவர்களும் டாக்டர் வி.டில்லிபாபு எழுதிய அறிவியல் நூல்களை சிறப்புக் கழிவு விலையில் பெறலாம். கூடுதல் விவரங்களைப் பெற 9944029700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment