ஸ்ட்ரெஸ் பஸ்டர் : நீங்கள் ஸ்ட்ரெஸாக இருக்கிறீர்களானால் உங்களுக்கு அதை மறக்கடிக்க நிச்சயம் மகிழ்ச்சியான சூழல் அவசியம். ஏனெனில் நீங்கள் ஸ்ட்ரெஸாக இருக்கும்போது கார்டிசோல் (cortisol ) எனப்படும் அமிலம் சுரக்கிறது. இதன் அளவு அதிகரிக்கும்போது இதயப் பிரச்னைகள் வரும். இதைத் தவிர்க்க நீங்கள் எப்போதும் சிரித்துக் கொண்டே இருங்கள். இதனால் கார்டிசோலின் அளவு 69 சதவீதம் குறைவதாக ஒரு ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர். இனி கவலையை மறந்து ஸ்ட்ரெஸை துரத்தி அடிக்க வாய்விட்டுச் சிரிங்கள்.
இதயப் பிரச்னைகள் வராது : சிரிக்கும் போது உள்ளிழுத்துவிடும் மூச்சால் இரத்தத்தில் ஆக்ஸிஜனேற்றம் நிகழ்கிறது. இதனால் இரத்த ஓட்டம் இதயத்திற்கு சீராகப் பாய்ந்து அதன் செயல்பாடுகளும் சிறப்பாகிறது.
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் : சிரிப்பதால் பீடா எண்டோர்ஃபின்ஸ் (Beta-Endorphins ) மற்றும் இதர ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை டி- செல் (T-cells ) உற்பத்தியைத் தூண்டுகிறது. இதனால் லிம்ஃபோசைட்ஸ் (lymphocytes) உருவாகி அதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் : சிரிக்கும்போது இதயத்தின் ஆற்றலும் சீராகிறது. இதனால் இரத்த ஓட்டமும் அதிகரித்து இரத்த அழுத்தப் பிரச்னையை சரி செய்கிறது. இரத்த தசை நாளங்களையும் திறம்பட செயலாற்றச் செய்கிறது.
மன அழுத்தம் நீங்கும் : ஆராய்ச்சியில், சிரிப்பதால் உங்கள் மூளையின் செயல்திறன் அதிகரித்து மன அழுத்தத்தைக் குறைப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அந்த ஆராய்ச்சியில் எப்போதும் மன அழுத்தத்திலேயே இருக்கும் அவர்கள் நகைச்சுவை என்பதையே மறந்திருந்தனர். அவர்களுக்கு முற்றிலும் சிரிக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு மகிழ்ச்சியான சூழலில் வைத்திருந்ததில் அவர்களின் மன அழுத்தம் கட்டுப்பாட்டில் இருந்ததை அறிந்துள்ளனர். நாம் சிரிக்கும் போது பெருமூளைப் புறணி ( cerebral cortex ) முழுவதும் அதன் தாக்கம் எதிரொலித்து ஆற்றலை ஏற்படுத்துகிறது. சிரிப்பு என்பது மன அழுத்தம் மட்டுமன்றி மனக் கவலை, மனச் சோர்வு போன்றவற்றையும் குறைத்து நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகைச் செய்கிறது.
No comments:
Post a Comment