திருப்பூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 126 செவிலியர் காலிப்பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களுக்கு ரூ.18 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படவுள்ளது. ஜனவரி மாத இறுதிக்குள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | வயது |
செவிலியர்கள் | 126 | 50 வயது வரை |
கல்வித்தகுதி:
இப்பணிக்கு இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் https://tiruppur.nic.in/ என்ற மாவட்ட இணையத்தளத்தில் உள்ள விண்ணப்படிவத்தைப் பூர்த்தி செய்து அதனை அலுவலகத்திற்குத் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர்
சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம்,
147 - பூலுவபட்டி பிரிவு, நெருப்பெரிச்சல் சாலை,
திருப்பூர் - 641 602.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.01.2023 மாலை 5 மணி வரை.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக்செய்யவும்.
No comments:
Post a Comment