கடந்த சில நாட்களாக தொண்டை சளியால் அவதிப்படுகிறீர்களா..? இந்த வீட்டு வைத்தியங்களை செஞ்சு பாருங்க..! - Agri Info

Adding Green to your Life

January 19, 2023

கடந்த சில நாட்களாக தொண்டை சளியால் அவதிப்படுகிறீர்களா..? இந்த வீட்டு வைத்தியங்களை செஞ்சு பாருங்க..!

 குளிர் அல்லது மழைக்காலம் வந்தாலே சளி, தொண்டை பிரச்சனைகள் வந்துவிடும். அப்படி சளி சேர்ந்துவிட்டாலே குறைந்தது 7 முதல் 14 நாட்கள் வரை நீடிக்கும். ஆனால் அதற்குள் நாம் படும் பாடு சொல்லி மாளாது. குறிப்பாக சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு குளிர்காலம் என்பது நெருக்கடியான பருவநிலை எனலாம்.

அப்படி, சைனஸின் ஒரு வகைதான் தொண்டையில் சளி கட்டுதல். பெரும்பாலானோர் அவதிப்படுவதும் இந்த பிரச்சனையால்தான். இது வந்துவிட்டாலே குரலில் மாற்றம், தொண்டை வலி , வீக்கம் , எதையும் சாப்பிட முடியாது , கண்ணங்கள் , தாடைகளில் வலி என பல அறிகுறிகள் இருக்கும். இதனால் அன்றாட வேலைகளில் கூட ஈடுபட முடியாது.

இவ்வாறு தொண்டையில் சளி கட்ட என்ன காரணம் தெரியுமா..?

அதாவது குளிர்காலத்தில் காற்றின் மூலம் பரவும் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகள் மூலமாக சளி பிடிக்கும்போது சைனஸ் பிரச்சனை உருவாகிறது. இந்த பாக்டீரியாக்கள் சைனஸ் அறைக்குள் சென்று சளி சவ்வுகளை வீங்க வைத்து அழற்சியை ஏற்படுத்துகிறது. இதனால் மூக்கில் நிணநீர் அதிகமாக சுரந்து தொண்டை வழியாக சளி திரவம் சுரந்துகொண்டிருக்கும். சில நேரங்கள் சளி திரவம் அடர்த்தியாக கட்டிகொள்ளும். இதனால் தொற்று வீரியம் அதிகரித்து தொண்டையில் வலியை உண்டாக்கும்.

இதனால் தொடர் இருமல், தொண்டைப்புண், தொண்டை வீக்கம், தாடை வலி, தலைவலி, தலைபாரம் , மூக்கடைப்பு, அடிக்கடி தும்மல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

இதை சரி செய்ய சில வீட்டுக்குறிப்புகள் உள்ளன. இதை பின்பற்றுவதால் உங்கள் வலிக்கு சற்றூ நிவாரணம் கிடைக்கலாம். பிரச்சனை தீவிரமாக இருப்பின் மருத்துவரை அணுகுதல் நல்லது.

தொண்டை சளியை கரைக்கும் வீட்டு வைத்தியங்கள் :

1 .  ஒரு கிளாஸ் தண்ணீரை 5 நிமிடங்கள் சூடாக்கி அதில் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்து வாயை 3-4 முறை கொப்பளிக்க வேண்டும். தண்ணீர் வெதுவெதுப்பான பதத்தில் இருக்க வேண்டும்.

2.  1 ஸ்பூன் அதிமதுரப் பொடியை தேனில் கலந்து சாப்பிடுங்கள் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து வாயை கொப்பளித்து துப்பலாம்.

3.  வெற்றிலைக் கொடியின் தண்டுப் பகுதியை மட்டும் வாயில் போட்டு மென்று விழுங்க தொண்டை கரகரப்ப் நீங்கும்.

4.  வெற்றிலையை மைய அரைத்து அதன் சாறில் சுண்ணாம்பு குழைத்து தொண்டையில் தடவுங்கள். தொண்டை சளி நீங்கி, தொண்டை கட்டியிருந்தாலும் சரியாகும்.

5.  பசும்பாலுடன் 1 பூண்டு, மிளகுத்தூள், மஞ்சள் தூள், பனங்கற்கண்டு சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி குடித்து வர தொண்டை சளி கரைந்துவிடும்.

6.  முருங்கை இலை சாறு அல்லது குப்பைமேனி இலை சாற்றுடன் சுண்ணாம்பு குழைத்து தொண்டையில் தடவ சளி நீங்கும்.

7.  கற்பூர வல்லி இலையை மென்று விழுங்கினாலும் சளிக்கு நல்லது.

8.  துளசி இலைஅல்லது இஞ்சியை கொதிக்க வைத்து அவ்வப்போது தொண்டைக்கு இதமாக இருக்க குடித்து வந்தாலே சளி கரையும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment