பெருங்காயத்தை குழம்பில் ஒரு சிட்டிகை சேர்த்தாலும் அதன் மணம் சுண்டி இழுக்கும். அதன் அளவு குறைவாக இருந்தாலும் நன்மைகளை ஏராளம் அள்ளித்தரும். குறிப்பாக பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதில் நிறைவாக உள்ளன. அந்த வகையில் பெருங்காயத்தை வெந்நீரில் கலந்து குடித்தால் அதன் இன்னும் பல மருத்துவ நன்மைகளை பெறலாம். பெருங்காயத்தை வெந்நீரில் ஒரு சிட்டிகை கலந்து குடிப்பதன் நன்மைகளை ஊட்டச்சத்து நிபுணர் ப்ரீத்தி தியாகி விளக்குகிறார். அவை என்னென்ன பார்க்கலாம்.
எடையை குறைக்கிறது : பெருங்காயம் கலந்த நீரானது வளர்ச்சிதை மற்றத்தை அதிகரிக்கிறது. இதனால் உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது. இதை தினமும் காலை குடித்து வாருங்கள். உங்களுக்கே ரிசல்ட் தெரியும்.
செரிமானத்தை அதிகரிக்கும் : வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு பெருங்காயம் மிகுந்த நன்மை அளிக்கிறது. அந்த வகையில் நீங்கள் செரிமான பிரச்சனையால் அவ்வப்போது பாதிக்கப்படுகிறீர்கள் எனில் வெதுவெதுப்பான நீரில் பெருங்காயம் கலந்து குடித்தால் சீராகும். செரிமான மண்டலத்தில் உள்ள நச்சுக்கள் நீங்கி சுத்தமாகும்.
சளி மற்றும் காய்ச்சல் நிவாரணி : குளிர்காலத்தில் பொதுவாக காய்ச்சல் மற்றும் சளி வருவது இயல்பு. இதிலிருந்து விடுபட வேண்டும் எனில் பெருங்காயம் கலந்த நீரை குடியுங்கள். இதனால் சுவாசப்பிரச்சனையையும் சரி செய்யலாம்.
தலைவலியை போக்கும் : அழற்சி எதிர்ப்பு பண்புகள் பெருங்காயத்தில் இருப்பதால் தலைவலிக்கு நல்ல மருந்தாக இருக்கும். இது இரத்த நாளங்களில் உள்ள வீக்கத்தை குறைப்பதால் வலி குறையும்.
மாதவிடாய் வலிக்கு மருந்து : மாதவிடாய் நாட்களில் ஏற்படும் அடி வயிற்று வலியை போக்க வேண்டுமெனில் வெதுவெதுப்பான நீரில் பெருங்காயத்தை ஒரு சிட்டிகை கலந்து குடியுங்கள். காலையில் வெறும் வயிற்றில் குடிக்க சரியாகும்.
இரத்த சர்க்கரை அளவு மேம்படும் : இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் பெருங்காயம் பெரும் பங்கு வகிக்கிறது. அதிலும் வெதுவெதுபான நீரில் கலந்து குடிக்கும்போது அது கணைய செல்களை தூண்டி அதிக இன்சுலினை சுரக்க வைக்கிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவு மேம்படும்.
No comments:
Post a Comment