குளிர்காலம் இன்னும் சில வாரங்களுக்கு மட்டுமே என்றாலும் புதுடெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்கள் உட்பட இன்னும் பல பகுதிகளில் நாளுக்கு நாள் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மக்களை குளிர் வாட்டி வதைக்கும் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு குளிர்கால விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதே போல இந்த மாநிலங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்க பல நிறுவனங்கள் அனுமதித்துள்ளன. அண்டை மாநிலமான பெங்களூருவில் கூட சில வாரங்களாக கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. தமிழகத்திலும் கூட பல பகுதிகளில் அவ்வப்போது குளிர் அதிகரித்து காணப்படுகிறது. எனவே நீங்கள் எங்கு வசித்தாலும் கடும் குளிர் அலையை எதிர்த்து போராடுவதற்கான டிப்ஸ்களை தெரிந்து கொள்வது அவசியம்.
டெல்லி ஃபோர்டிஸ் மருத்துவமனையில் சீனியர் கன்சல்ட்டன்டாக இருக்கும் டாக்டர் முக்தா தப்டியா இதுபற்றி பேசுகையில், பெரும்பாலான நேரங்களில் சரியான உடல் வெப்பநிலையை பராமரிக்க முக்கிய உறுப்புகளுக்கு ரத்த விநியோகம் உடலில் செல்கிறது. ஆனால் உடலின் முக்கிய உறுப்புகள் சோர்வடைந்து, வெப்பநிலை குறைவாக இருக்கும் போது சில நேரங்களில் மூளைக்கு கூட போதுமான ரத்தம் கிடைக்காது. இதனால் ஹைபோக்ஸியா, ஆக்ஸிஜன் குறைவு, தலைசுற்றல், பேச்சில் தெளிவின்மை, ஹைப்போதெர்மியா, ரத்த நாளங்கள் சுருங்குவது, உயர் ரத்த அழுத்தம் ஏற்படலாம்.
குளிர் அதிகமாக இருக்கும் காலை நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது உடல் குறிப்பாக காது பகுதி நன்றாக மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். பல லேயர் ஆடைகள், கிளவுஸ், ஹேட் அல்லது வார்ம் கேப் மற்றும் ஷூக்களை அணிந்து கொள்வது குளிரிலிருந்து பாதுகாக்கும். குளிர்காலத்தில் மற்றும் குறிப்பாக குளிர் அலைகள் அதிகம் இருக்கும் போது சருமத்தை கூடுதலாக கவனித்து கொள்ள வேண்டியது அவசியம். எனவே உடலை ஹைட்ரேட்டாக மற்றும் எப்போதும் மாய்ஸ்ரைசிங்காக வைத்திருப்பது குளிர்காலத்தில் நல்ல சருமத்தை பெற முக்கியம். டாக்டர் முக்தா தப்டியா பேசுகையில் குளிர்காலத்தில் ஹை-புரோட்டின் டயட்டை பராமரிக்க வேண்டும்.
மேலும் குளிர்காலத்தில் வெயிலில் அதிகம் இருக்காது வைட்டமின் டி குறைபாட்டிலிருந்து தப்பிக்க வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்து கொள்ளலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி நிறைந்த ஃபிரெஷ்ஷான பழங்கள் மற்றும் சத்தான காய்கறிகளை டயட்டில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். வழக்கம் போல தினமும் தவறாமல் ஒர்கவுட்ஸ்களில் ஈடுபட வலியுறுத்துகிறார் தப்டியா. கடும் குளிரில் எப்படி ஒர்கவுட்ஸ் செய்வது என்று யோசிக்காதீர்கள்.! குளிரில் விறைத்து கிடைக்கும் உடலை இயல்பாக்க மற்றும் வெப்பமாக்க ஒவ்வொரு நாளும் குறைந்தது 30-45 நிமிடங்களாவது வழக்கம் போல ஒர்கவுட்ஸில் ஈடுபட வேண்டும். ஜிம் அல்லது அவுட் டோர் ரன்னிங் போக முடியவில்லை என்றால் தாக்கத்தை ஏற்படுத்தும் வீட்டிலிருந்தே செய்ய கூடிய உடற்பயிற்சிகளை முயற்சிக்க வேண்டும்.
நாட்டில் குளிர் அலை அதிகரித்து காணப்படுவதற்கு மத்தியில் ஒருவர் செய்ய கூடாத ஒன்று, சிங்கிள் லேயர் ஆடைகளை அணிந்து செல்வது. நாம் மல்டிபிள் லேயர்களை அணியும் போது காற்று வெளியே பயணிக்க முயற்சிக்கிறது. ஆனால் காற்று வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கி கொள்கிறது. இதனால் பல ஏர் பாக்கெட்ஸ் உற்பத்தி செய்யப்படுகின்றன. காற்று ஒரு மோசமான கடத்தி என்பதால் வெளிப்புறக் குளிரால் பாதிக்கப்படாது. எனவே நீங்கள் மல்டிபிள் லேயர்களை அணிந்திருக்கும் போது உற்பத்தியாகி இருக்கும் பல ஏர் பாக்கெட்ஸ் உடலுக்கு வெப்பத்தை அளிக்கிறது. குளிருக்கு இதமாக ஒரு தடிமனான ஜாக்கெட்டை அணிவதை விட, மல்டிபிள் லேயர் அணிவது ஏர் ட்ராப்பிங் காரணமாக உடலை சூடாக வைத்திருக்க உதவும் என்கிறார் டாக்டர் முக்தா தப்டியா.
0 Comments:
Post a Comment