சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் உள்ள இடைநிலை/ பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களைத் தற்காலிகமாகத் தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாணமைக்குழுவின் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்று இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பட்டியலினத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பணியின் விவரங்கள்:
பதவி | பள்ளி | பணியிடம் |
இடைநிலை ஆசிரியர் | அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி,வெங்கடேசபுரம். | 2 |
பட்டதாரி ஆசிரியர் | அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி,திருமங்கலம்(அறிவியல்),மதுரவாயல்(ஆங்கிலம்) மற்றும் சென்னை(அறிவியல்) | 3 |
முதுகலைப்பட்டதாரி | அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,கன்னிகாபுரம்(இயற்பியல்),(வரலாறு) | 7 |
சம்பளம்:
இடைநிலை ஆசிரியர் பணிக்கு ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ரூ.10,000 மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ரூ.12,000 வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
இடைநிலை ஆசிரியர்/பட்டதாரி ஆசிரியர் பணிக்கு வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருவபர்கள் அல்லது டெட் தகுதித் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பட்டியலினத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுக்கான ஆசிரியர்கள் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம் . பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள் அல்லது பள்ளி அமைந்துள்ள ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவர்கள் அல்லது மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள் அல்லது அருகாமை மாவட்டத்தில் வசிப்பவர்கள் முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆசிரியர் பணிக்குத் தகுதியும் ஆர்வமுள்ள உள்ளவர்கள் சென்னை மாவட்ட ஆட்சியரகத்தில் 2 ஆம் தளத்தில் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரிடையாகவோ பதிவஞ்சல் மூலமாகவோ 18.01.2023 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment