போட்டித் தேர்வுகள் இல்லை... டிகிரி தகுதி போதும் - பயிற்சியுடன் தனியார் வங்கிகளில் கொட்டிக் கிடக்கும் வேலை! - Agri Info

Adding Green to your Life

January 17, 2023

போட்டித் தேர்வுகள் இல்லை... டிகிரி தகுதி போதும் - பயிற்சியுடன் தனியார் வங்கிகளில் கொட்டிக் கிடக்கும் வேலை!

 தனியார் வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் பணிபுரிய ஏதுவாக கணக்கு நிர்வாக (Account Executive) பணிக்கான இலவச பயிற்சியை தாட்கோ நிறுவனம்  (தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டுக்கு கழகம்) அறிவித்துள்ளது. மேலும், இந்த பயிற்சியை  முடித்தவர்கள் HDFC, ICICI உள்ளிட்ட தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்புக்கு 100% வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் சார்ந்த வேலை வாய்ப்பு பயிற்சி திட்டங்களில் தாட்கோ நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் (Banking Financial service and Insurance)  ஆதிதிராவிட இளைஞர்கள் பணிபுரிய ஏதுவாக   ACCOUNTS ASSITANTS (கணக்கு நிர்வாகி) திறன் பயிற்சியை தாட்கோ அறிவித்துள்ளது.

யார் விண்ணப்பிக்கலாம்? 21 வயது முதல் 33 வயதுக்குள் உள்ள   ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இளைஞர்கள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். BA, B.com, BSc Maths என ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி:  சென்னையில் 20 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். விடுதியில் தங்கி படிக்க வசதி என  இப்பயிற்சிக்கான மொத்த செலவுத் தொகையான ரூ.20,000-த்தை தாட்கோ நிறுவனமே ஏற்கும். பயிற்சிக்குப் பிறகு, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தால் நடத்தப்படும் பயிற்சித் தேர்வுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு வங்கி நிதி சேவை காப்பீடு (BFSI) ஆல் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

100% வேலைவாய்ப்பு:  மேலும், தனியார் வங்கி நிறுவனங்களில் கணக்கு நிர்வாக (Account Executive) பணியில் சேர 100%  வழிவகை செய்யப்படும். இப்பணியில் ஆரம்பகால மாத சம்பளமாக ரூ.25,000/-முதல் ரூ.30,000/- வரை பெறலாம். இப்பயிற்சியினை தாட்கோ, இணையதளமான http://www.tahdco.com/  என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment