டீ அல்லது காபியுடன் ரஸ்க் குடிக்க பலர் விரும்புவார்கள். இன்னும் பலர் அதை அப்படியே சாப்பிடுகிறார்கள். இருப்பினும் சிலருக்கு ரஸ்க் ஆரோக்கியமான சிற்றுண்டியா? டீ காபியுடன் சாப்பிடலாமா? இது என்ன கூறுகளை உள்ளடக்கியது? இதை சாப்பிட்டால் என்ன நடக்கும்..? என்ற கேள்விகள் இருக்கும். அவர்களுக்காகவே இந்த கட்டுரை
ரஸ்க் உடல் நலத்திற்கு நல்லதல்ல...
ஊட்டச்சத்து நிபுணர் குஷ்பூ ஜெயின் திப்ரேவாலா "ரஸ்க் சுத்திகரிக்கப்பட்ட மாவு, சர்க்கரை, எண்ணெய்கள், பசையம் மற்றும் சோடா மாவு சேர்க்கைகளுடன் சமைக்கப்படுகிறது. இந்த உணவு கலவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்” என எச்சரிக்கிறார்.
ரஸ்கின் தினசரி நுகர்வு இரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்கும் மற்றும் அழற்சியின் அபாயத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. "ரஸ்க்கை தினமும் உட்கொள்வது உங்கள் குடலில் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. இது மோசமான செரிமானம் மற்றும் பசிக்கு வழிவகுக்கிறது" என்கிறார் குஷ்பூ ஜெயின்.
மேலும், ரவையில் இருந்து தயாரிக்கப்படும் ரஸ்க் உடல் நலத்திற்குப் பயனளிக்காது. "இது உங்கள் குடல் மற்றும் ஹார்மோன் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. உடலில் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. சோம்பேறித்தனத்தையும் ஏற்படுத்துகிறது” என்கிறார் குஷ்பு ஜெயின்.
ஹார்மோன் நிபுணரும் ஊட்டச்சத்து நிபுணருமான ஷிகா குப்தா, ரஸ்கின் பொருட்களை விரிவாக டிகோட் செய்துள்ளார்.
சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவு/மைதா: ரஸ்க் தயாரிப்பதில் சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவு அல்லது மைதா மாவு பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து உமி, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிலிருந்து எடுக்கப்படுகின்றன. எனவே, இதில் நார்ச்சத்து எதுவும் இல்லை.
சர்க்கரை: ரஸ்கில் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்டுகிறது. நீங்கள் வெறும் 2 ரஸ்க் சாப்பிட்டால் கூட, அது உங்கள் தினசரி சர்க்கரை அளவை மீறுவது போன்றது என்கிறார் குப்தா.
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்: இதில் பயன்படுத்தப்படும் எண்ணெயின் தரம் இல்லாததாக இருப்பதால் ஊட்டச்சத்து நன்மைகளும் இல்லை.
ரவை ரஸ்க்: ரவையிலிருந்து தயாரிக்கப்பட்டாலும், அதிலிருந்து அனைத்து நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களும் நீக்கப்பட்டே தயாரிக்கப்படுகிறது .
உணவு சேர்க்கைகள் மற்றும் செயற்கை சுவைகள்: ரஸ்கை நீண்ட காலத்திற்கு பாதுகாக்க நிறைய இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. மேலும் சுவை மற்றும் வாசனைக்காகவும் இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்கிறார் குப்தா.
உணவு வண்ணம்: ரஸ்கிற்கு பழுப்பு நிறத்தைக் கொடுக்க கேரமல் கலரிங் அல்லது பிரவுன் ஃபுட் கலரிங் பொதுவாக சேர்க்கப்படுகிறது. இந்த நிறம் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். மைதாவுடன் ரஸ்க் கோதுமை போல தோற்றமளிக்க இது பயன்படுகிறது" என்கிறார் சுகாதார பயிற்சியாளர் திக்விஜய் சிங்.
ஆனாலும் நீங்கள் ரஸ்க் சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால், உங்களுக்காக சில டிப்ஸ்
ரஸ்க் சாப்பிடும் போது இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்
“மல்டிகிரேன் ரஸ்கில் மைதாவும் இருக்கலாம். எனவே, எப்போதும் 100 சதவீதம் கோதுமை அல்லது 100 சதவீதம் ரவை இருக்கும் ரஸ்க் தேர்வு செய்யுங்கள். எந்தவொரு பொருளையும் வாங்கும் முன் லேபிள்களை கவனமாக படிக்குமாறு குஷ்பு ஜெயின் அறிவுறுத்துகிறார்.
No comments:
Post a Comment