எப்போதுமே ஒரு கூட்டத்தில் புத்திசாலிகளை மட்டும் தனியாக அடையாளம் கண்டு கொள்ள அனைவராலும் முடியாது. மேலும் அவர்கள் எப்போதும் தங்களை மறைத்துக் கொண்டுதான் வாழ விரும்புவார்கள். அனைவருமே தாங்கள் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று எண்ணினாலும் பலரால் அது முடிவதில்லை. புத்திசாலிகள் தங்களுக்கு என்ன சில குறிப்பிட்ட பழக்கங்களை வைத்துள்ளனர். இவற்றைக் கொண்டு நாம் அவர்களை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம். மேலும் அவர்களது பழக்கவழக்கங்களில் சிலவற்றை நாமும் பின்பற்றலாம். அந்த வகையில் புத்திசாலிகளிடம் பொதுவாக காணப்படும் பழக்கங்களை பற்றி இப்போது பார்ப்போம்.
தங்களுக்குத் தெரிந்ததை காண்பித்துக் கொள்ள மாட்டார்கள்: புத்திசாலிகள் பொதுவாக தங்களுக்கு ஒரு விஷயம் தெரிந்து விட்டது என்றால் அதைப் பற்றி வெளியே காண்பித்துக் கொள்ள மாட்டார்கள். அதைப் பற்றி மேலும் அதிகமாக தெரிந்து கொள்வதிலேயே குறியாக இருப்பார்கள்.
மற்றவர்களை கவனிப்பார்கள் : இவர்கள் எப்போதும் மற்றவர்கள் செய்யும் செயல்களை உன்னிப்பாக கவனிப்பார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் எப்படி செய்கிறார்கள் அவர்களிடம் உள்ள நிறைய குறைகள் ஆகியவற்றை எடை போடுவார்கள்.
சுதந்திரமாக செயல்படுவார்கள் : தனிப்பட்ட வாழ்க்கையோ வேறு எதுவும் பிரச்சனையாக இருந்தாலும் தனியாக மற்றவரின் உதவியின்றி அந்த பிரச்சனையை எதிர்கொண்டு தீர்த்து வைக்க முயற்சி செய்வார்கள்.
பெருமை பேசுதல் : புத்திசாலி நபர்கள் எப்போதும் தங்களைப் பற்றி அதிகமாக பெருமையாக பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள். முக்கியமாக மற்றொருவர் முன்னிலையில் தற்பெருமை பேசுபவர் என்பது அவர்களுக்கு கிடையவே கிடையாது. எப்போதும் அமைதியான மனநிலையிலேயே இருக்க விரும்புவார்கள்.
நிலைமையை கணிக்க கூடியவர்கள் : இவர்கள் எப்போதும் பல்வேறு விஷயங்களை ஒன்றாக சேர்த்து அதன் மூல காரணத்தை அறிய முற்படுவார்கள். தனித்தனியாக பிரிந்து உள்ள விஷயங்களை சரியான விதத்தில் ஒன்று சேர்ந்து அதன் முக்கியமான நோக்கத்தை தெரிந்து நிலைமையை எளிதாக கணிப்பார்கள்.
வாசிப்பு : அதிக அளவு புத்திசாலித்தனமாக உள்ள பலரும் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவராக இருக்கிறார்கள். புத்தகத்தின் மூலமாகவே அவர்கள் உலகத்தின் பல்வேறு விஷயங்களையும் தெரிந்து கொண்டு தங்களது அறிவாற்றலை பெருக்கிக் கொள்கிறார்கள்.
கேள்விகள் : இவர்கள் எப்போதும் அதிகமாக கேள்வி கேட்கும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். தனக்குத் தோன்றும் பல்வேறு கேள்விகளுக்கான பதில்களை தெரிந்து கொண்டு தங்களது அறிவாற்றலை பெருக்கிக் கொள்வார்கள்.
மற்றவர்களின் நடத்தையை கண்டுகொள்ள மாட்டார்கள் : மிகவும் அடாவடித்தனமான நடத்தை உடைய மனிதர்களை இவர்கள் அறவே மதிக்க மாட்டார்கள். அது போன்ற மனிதர்களை புறந்தள்ளி தன்னுடைய வழியில் சென்று கொண்டிருப்பார்கள்.
அதிகம் பேச மாட்டார்கள் : இவர்கள் ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு விவரிக்க வேண்டும் எனில் மிக சுருக்கமாக எளிமையான முறையில் விவரித்து விடுவார்கள். தேவையற்ற அதிகமான வார்த்தைகளை வளவளவென்று பேசி மற்றவர்களின் நேரத்தை வீணடிக்க விரும்ப மாட்டார்கள்.
0 Comments:
Post a Comment