பரபரப்பான வாழ்க்கையில் இருந்து விடுபடவும், மன அழுத்ததிலிருந்து விடுதலை பெறவும் பலர் மனதிற்கு இதமான சில பயணங்களை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். ஒருவர் உடலையும், மனதையும் சரியான சமநிலையில் வைத்துக்கொள்ள இதுபோன்ற பயணங்கள் மேற்கொள்வது மிகவும் உதவிகரமானதாக இருக்கும். இது தவிர தியானம் செய்வதும், யோகாசனம் செய்வது, மசாஜ் சென்டர்களுக்கு செல்வது சாகச பயணங்களை மேற்கொள்வது போன்றவையும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும்.
வெல்னஸ் டிராவல் எனப்படும் இந்த ஆரோக்கிய பயணங்களை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இவ்வாறு நீங்கள் ஆரோக்கிய பயணங்களை மேற்கொள்ளும் நேரங்களில் உங்களது மன அழுத்தத்தை குறைப்பது பற்றியும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதையும், தெளிவான சிந்தனைகளும், நன்றாக உறங்குவதற்கும் அவை எவ்வாறு உதவி செய்கின்றன என்பதை பற்றி பார்ப்போம்.
மன அழுத்தத்தை குறைக்க உதவும்: தினசரி ஒரே விதமான வாழ்க்கை முறைகளை பின்பற்றி, ஒரே விதமான செயல்களை செய்து நமது உடலும் மனமும் மிகவும் சோர்வடைந்திருக்கும். இது போன்ற சமயங்களில் இந்த ஆரோக்கிய பயணங்களை மேற்கொண்டு உடலுக்கும் மனதிற்கும் சற்று ஓய்வு அழித்து புத்துணர்ச்யூட்டும் விதமாக நாம் மாற்றி கொள்ள வேண்டும். முக்கியமாக இது போன்ற பயணங்களின் போது யோகாசனம் செய்வது தியானம் செய்வது ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். இவற்றின் மூலம் மனம் தெளிவாகவும், மிகவும் ரிலாக்ஸாகவும் இருக்க உதவும். இதைத் தவிர மலையேற்றம், நீச்சல் போன்றவையும் நம் மனதை அமைதியாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள உதவும்.
உடல் இயக்கங்கள் அதிகரிப்பு: நீண்ட நேரம் அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கும், ஒரே விதமான வேலை செய்பவர்களுக்கும் இந்த ஆரோக்கிய பயணத்தின் போது உடல் இயக்கங்களை அதிகரிக்கும் விதமான வேலைகளை செய்ய வேண்டும். யோகாசனம் செய்வது மலை, ஏறுவது, ஃபிட்னஸ் வகுப்புகளுக்கு செல்வது ஆகியவை இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். மேலும் வலுவான தசைகளை கட்டமைக்கவும் உதவும்.
சிறப்பான மனநிலை : யோகாசனம் செய்வதும், தியானம் செய்வதும் நம்முடைய மனதை பக்குவப்படுத்துவதோடு மிகவும் தெளிவாக சிந்திக்கவும் வைக்கிறது. இதன் மூலம் தேவையற்ற மன அழுத்தங்கள் மனக்கவலைகளில் இருந்து நம்மால் எளிதாக வெளிவர முடியும். நீங்கள் உங்களது வழக்கமான இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு செல்வதும், உங்களது சுற்றுச்சூழலை மாற்றி அமைப்பதும், சுத்தமான காற்றை சுவாசிப்பதும் கூட உங்களது மனநிலையில் நல்ல மாறுதல்களை அளிக்கக்கூடும். இயற்கையோடு ஒன்றி இருப்பது என்பதே ஒரு சிகிச்சை முறை ஆகும்.
நல்ல உறக்கம்: ஆரோக்கிய பயணங்களை மேற்கொள்வதன் மூலம் உங்களுக்கு நல்ல உறக்கம் கிடைக்கும். தினசரி வாழ்க்கையில் இருந்து விடுபடுவதும், புதிய சூழ்நிலையில் உங்களை உட்படுத்திக் கொண்டு அதற்கு ஏற்றபடி நடந்து கொள்வதுமே மனதிற்கு புத்துணர்ச்சி கொடுக்கும். மலையேற்றம், நீச்சல் ஆகியவை உடலை மிகவும் களைப்பாக்கி மிக எளிதில் உறங்குவதற்கு உதவுகிறது.
அதிகரித்த சுய விழிப்புணர்வு: மேலே கூறிய அனைத்தையும் விட ஆரோக்கிய பயணங்களை மேற்கொள்வதினால் கிடைக்கும் முக்கிய பயனே நமது சுய விழிப்புணர்வை அதிகப்படுத்துவது ஆகும். நமது அன்றாட பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட்டு, புதிய பழக்கங்களுக்கு உட்படுவதன் மூலமாக ஒருவர் தன்னை பற்றி நன்றாக தெரிந்து கொள்ள முடியும். மேலும் மிகத் தெளிவாக சிந்திக்கவும் முடியும். இதனால் சுய விழிப்புணர்வு ஒருவருக்கு அதிகரிக்கும்.
0 Comments:
Post a Comment