தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர்/பழங்குடியின இளைஞர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெற Aspiring
Minds Computer Adaptive Test AMCAT தேர்வு இலவச பயிற்சியை தாட்கோ அறிவித்துள்ளது.
அடிப்படைத் தகுதிகள்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். பயிற்சி கால அளவு மூன்று மாதம் ஆகும். இப்பயிற்சியினை பெற அனைத்து செலவினையும் தாட்கோ ஏற்கும்.
AMCAT பயிற்சித் திட்டம்
இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் AMCAT தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். தேர்வில் வெற்றி பெறும் மாணாக்கர்களுக்கு AMCAT சான்றிதழும் வழங்கப்படும் இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலை வாய்ப்பு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுளளது.
விண்ணப்பம் செய்வது எப்படி? தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற இணையதளத்தில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
Click here for latest employment news
0 Comments:
Post a Comment