உடலில் உள்ள ரத்த நாளங்களின் சுவர்களில் பிளேக் உருவாக்கத்தினால் இந்த வியாதி உண்டாகிறது. இந்த ரத்த நாளங்கள் இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய பணியை செய்கின்றன. மேலும் நாளடைவில் இந்த ரத்த நாளங்களில் கொழுப்புகள் படிந்து ரத்த ஓட்டத்தை சிரமமாக்குகின்றன. இதன் காரணமாக ரத்தத்தின் வழியாக ஆக்ஸிஜன் கடத்தப்படுவது தடை செய்யப்படுகிறது.
அப்ஸ்ட்ராக்டிவ் கொரோனரி ஆட்டரி டிசிஸ், நான் அப்ஸ்ட்ராக்டிவ் கொரோனறி ஆர்டரி டிசீஸ், ஸ்பான்டேனியஸ் கொரோனரி ஆட்டரி டைசெக்ஷன் ஆகியவை இந்த நோயின் வகைகள் ஆகும்.
மாரடைப்பு
உடலில் அதிக அளவு கொழுப்பு சேர்வதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. ரத்த நாளங்களில் கொழுப்புகள் அதிகரிக்கும் போது, அவை ரத்தம் பாய்வதை தடை செய்கிறது. இதன் காரணமாக ரத்த நாளங்களின் வழியே போதுமான அளவு ரத்தம் கடத்தப்படாத நிலையில் அங்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவதற்கு வழிவகை செய்கிறது.
பெரிபெரல் ஆர்டேரியல் டிசீஸ்
பிஏடி எனப்படும் இந்த நோய் அதிகப்படியான கொழுப்புகள் ரத்த நாளங்களில் படிவதால் ரத்த நாளங்கள் சுருங்குவதற்கு வழி செய்கிறது. முக்கியமாக உடலின் கீழ்பாகத்தில் இது அதிக பாதிப்பை ஏற்படுத்தும். கால்கள், பாதம், மூட்டுகள் ஆகிய இடங்களில் குறைந்த அளவு ரத்தம் பாய்வதோ அல்லது மொத்தமாக ரத்தம் பாய்வதை தடை செய்வதும் நிகழ்கிறது.
கால்களில் உணர்வற்று இருப்பதும், கால்களில் உள்ள சருமத்தின் நிறம் மாறுவதும், நகங்கள் மிக மெதுவாக வளர்வதும் காலில் காயம் ஏற்பட்டால் அவை ஆறுவதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்வதும் இந்த நோயின் அறிகுறிகள் ஆகும்.
பக்கவாதம்
இதயத்தை சுற்றியுள்ள ரத்த நாளங்களில் அதிக அளவு கொழுப்புகள் படிவதால் போதுமான அளவு ரத்தம் இதயத்திற்கு கடத்தப்படுவது தடை செய்யப்படுகிறது. மேலும் இதயத்தில் இருந்து மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களிலும் அடைப்பை ஏற்படுத்தி மூளைக்கு போதுமான அளவு ரத்தம் கடத்தப்படுவதும் தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக பக்கவாதம் உண்டாகிறது.
எவ்வாறு தற்காத்துக் கொள்வது?
முறையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பழக்க வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். நாம் உண்ணும் உணவில் சோடியம் குறைவாக இருக்கும் படியும் அதிக கொழுப்புகள் இல்லாத உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இறைச்சிகளை உண்பதற்கு பதிலாக காய்கறிகளையும் பழங்களையும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான புரதச்சத்து கிடைப்பதுடன் அதிகளவு கொழுப்பு சேர்வதையும் தவிர்க்க முடியும்.
இவற்றைத் தவிர தினசரி உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உடல் எடையை பேணிக்காப்பது ஆகியவை முக்கியமானவை.
0 Comments:
Post a Comment