Search

இந்த உணவுகள் மீந்து விட்டால் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடாதீர்கள்.. மீறினால் உங்களுக்கே விஷமாகலாம்..!

 ஒருவேளைக்கு சமைத்த உணவு மீந்து விட்டால் அதை 2 - 3 நாட்களுக்கு ஃபிரிட்ஜில் வைத்து படன்படுத்துவது நம்மில் பலரது பழக்கமாக இருக்கிறது. ஆனால் சுட சுட சமைத்து அல்லது அப்போதே தயார் செய்து சாப்பிடும் உணவுகளுக்கு பதில் அவற்றை ஸ்டோர் செய்து மீந்த உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா.?

ஆம், முக்கிய ஆய்வுகளின்படி ஏற்கனவே சமைத்த சில உணவுகளை மற்றும் பொருட்களை (ingredients) மீண்டும் சூடுபடுத்தும் போது அவற்றிலிருந்து தீங்கு விளைவிக்கும் சேர்மங்கள் வெளியாகின்றன அல்லது உடலுக்கு சுகாதார அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடிய சில சேர்மங்கள் மீண்டும் ரீஆக்டிவேட் செய்யப்படுகின்றன. உங்களை நோய்வாய்ப்படுத்த கூடும் என்பதால் மீந்தால் கூட தவிர்க்க வேண்டிய சில உணவுகளை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

முட்டைகள்: முட்டையில் எப்பொழுதும் சால்மோனெல்லா (salmonella) என்ற பாக்டீரியா இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். பொதுவாக முட்டைகளை சமைக்க பயன்படுத்தப்படும் முறைகள் குறுகிய காலத்திற்கு மென்மையான வெப்பத்தை (gentle heat) பயன்படுத்துகின்றன. இந்த ஹீட் முட்டைகளில் இருக்கும் சால்மோனெல்லா பாக்டீரியாவை முற்றிலும் அழிக்காது. எனவே சமைத்த முட்டைகளை ஸ்டோர் செய்து பின்னர் சாப்பிட்டால், அவை உடலுக்கு சில தீங்குகளை ஏற்படுத்த கூடும்..

பீட்ரூட்: உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் பீட்ரூட்டில் நைட்ரிக் ஆக்சைட் நிறைந்துள்ளன. இந்த கலவை நிறைந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தும் போது, அவை நைட்ரைட்ஸ்களாகவும் பின் நைட்ரோசமைன்ஸ்களாகவும் மாற்றப்படுகின்றன. எனவே ஒருமுறை சமைக்கப்பட்ட பீட்ரூட்டை அல்லது beet products-களை தொடர்ந்து சாப்பிடுவது சில வகை கேன்சருக்கான ஆபத்தை அதிகரிக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்..

கீரை: பீட்ரூட்டை போலவே சில கீரை வகைகள் நைட்ரேட் அதிகம் நிறைந்தவையாக இருக்கின்றன. கீரைகளில் உள்ள நைட்ரேட்ஸ்கள் கேன்சரை உண்டாக்கும் நைட்ரோசமைன்ஸ்களாக மாறுவதை தவிர்க்க அவற்றை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.

சிக்கன்: முட்டைகளை போலவே பச்சைக் கோழியிலும் (Raw chicken) சால்மோனெல்லா பாக்டீரியா உள்ளது. சமைத்த சிக்கனை மீண்டும் சூடுபடுத்தும் போது, அது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவாக மாற கூடும். எனவே சிக்கனை ஒரு முறைக்கு மேல் அதை மீண்டும் சூடாக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள் நிபுணர்கள்.

கோல்ட்-பிரெஸ்டு ஆயில்ஸ்: ஃப்ளேக்ஸ்சீட் , ஆலிவ் ஆயில் மற்றும் கனோலா ஆயில்ஸ் போன்ற கோல்ட்-பிரெஸ்டு ஆயில்ஸ்களில் ஒமேகா-3 கொழுப்புகள் மற்றும் பிற நிறைவுறா கொழுப்புகள் நிறைந்துள்ளன. இவை பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கும் அதே நேரம் வெப்பநிலைக்கு மிகவும் சென்சிட்டிவானவை. இந்த எண்ணெய்களை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை மீண்டும் சூடாக்குவது உடலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

0 Comments:

Post a Comment