பாசிட்டிவ் எண்ணங்கள்.. மனதளவில் உறுதியா மாற இதையெல்லாம் கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க! - Agri Info

Adding Green to your Life

January 17, 2023

பாசிட்டிவ் எண்ணங்கள்.. மனதளவில் உறுதியா மாற இதையெல்லாம் கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க!

 ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் உயர்வு, தாழ்வு என்பது ஒரு சாதாரண விஷயம் தான். நாம் உயர்ந்தவர்களாக இல்லை என்று யாரும் வாழ்க்கையில் வருத்தப்படத் தேவையில்லை. அதே சமயம் உங்களை எப்போதும் மற்றவர்களிடத்தில் உயர்ந்தவர்களாகக் காட்ட வேண்டும் என்றால், முதலில் நீங்கள் மனதளவில் உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் எந்த கஷ்டமான வேலைகளைச் செய்ய வேண்டாம். வாழ்க்கையில் சில குணங்களை மட்டும் பாலோ பண்ணினால் போதும் மனதளவில் நீங்கள் எப்போதும் உயர்ந்தவர்களாக  மாற்றும்  சில குணங்கள் உள்ளது. அவை என்னவென்று பார்க்கலாம்.



சமநிலை : ஒருவர் மனதளவில் நம்பிக்கையுடனும், உயர்ந்தவர்களுடன் இருந்தால் மட்டும் எந்த வேலையையும் சிறப்பாக செய்ய முடியும். எனவே நீங்கள் எந்த சூழலிம், உங்களது உணர்ச்சியை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். கோபம், சந்தோஷம் என எந்த சூழலிலும் உங்களின் மனதை சமநிலைப்படுத்த வேண்டும் என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

சரியான நேரத்தில் செய்து முடித்தல் : ஒரு வேலையை நீங்கள் செய்து முடிக்க என்று நினைத்து விட்டால் தாமதிக்கக்கூடாது. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் நீங்கள் செய்ய வேண்டிய வேலையை செய்ய முடியாது என்ற எண்ணத்தை விட்டு விடவும். இல்லையென்றால் நம்மால் செய்ய முடியுமோ? என்ற எண்ணமே உங்களின் மனதைப் பாதிக்கும்.

பொறுமைக் காத்தல் :வாழ்க்கையில் எந்த சூழல் வந்தாலும் பொறுமையுடன் கையாளவும். அவசரத்தில் கத்துவது, சண்டையிடுவது போன்ற விஷயங்களை மேற்கொள்வதை நிறுத்தி விட்டு பொறுமையுடன் யோசித்து பிரச்சனைக்குத் தீர்வு காணவும். தேவையில்லாத பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கும் இது சிறந்த வழியாக அமையும்.

பயத்தைத் தவிர்த்தல் : பயம் தான் மனிதனுக்கு மிகப்பெரிய எதிரியாக அமையும். பயத்தை விட்டுவிட்டீர்கள் என்றால் எந்த இடத்திலும், எந்த வேலையையும் சிறப்பாக செய்ய முடியும். இதோடு பயம் ஒருவரின் தன்னம்பிக்கையை இழக்கச் செய்து தலைகுனியத் தான் வைக்கும். எனவே எந்த சூழலிலும் பயத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல் தைரியமாக இருந்தாலே உங்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும்.



தவறுகளைத் திருத்திக்கொள்ளுதல் : மனிதராக பிறந்த யாராக இருந்தாலும் தவறு செய்யாதவர்கள் இருக்க முடியாது. இதிலிருந்து பலவற்றை நாம் கற்றுக்கொள்கிறோம். எனவே தவறுகள் இருந்தாலும் எதனால் ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது என்பதைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்றால் போல் உங்களின் மனநிலை மாற்றிக்கொள்ளவும். தவறுகளைக் கண்டு அச்சம் கொள்ளாமல் துணிவுடன் எதிர்க்கொள்ளவும்.

ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை : வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை துணிவுடன் ஏற்றுக்கொள்ளும் நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும். இறந்த காலத்தை யோசித்து நிகழ்காலத்தை இழந்துவிடக்கூடாது. யதார்த்தைப் புரிந்துக் கொண்டு எதிர்காலத்தை நோக்கி பயணிக்கவும்.

பொறாமையைத் தவிர்த்தல் : வாழ்க்கையில் உங்களது நண்பர்களோ? அல்லது உறவினர்களோ? யாரும் வெற்றிப்பெற்றிருந்தால் அவர்களை மனதாரப் பாராட்டுங்கள். உள்ளத்தில் ஒன்று வைத்துக்கொண்டு வெளி உலகத்திற்காக எதையும் பேச வேண்டாம். குறிப்பாக பொறாமையைத் தவிர்த்து மனதாரப் பாராட்டினாலே போதும் மனதளில் நீங்கள் உயர்ந்த குணம் கொண்டவர்களாக மாறிவிடுவீர்கள். இதே போன்று உங்களின் திறமையை அறிந்து செயல்படுவது மற்றும் பொய்களும், வஞ்சகமும் நிறைந்த வாழ்க்கையைத் தவிர்த்து நம்பிக்கையுடன் பயணித்தால் போதும். நீங்கள் எப்போதுமே உயர்ந்தக் குணம் கொண்டவர்களாக விளங்க முடியும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.


 Click here to join whatsapp group for daily health tip


No comments:

Post a Comment