நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை பற்களைத் துலக்கியும், உங்கள் வாயில் துர்நாற்றம் வீசுகிறதா? இன்று பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் வாய் துர்நாற்றம். இந்த வாய் துர்நாற்றமானது ஒருவரது தன்னம்பிக்கையைக் குறைக்கும் என்பது தெரியுமா? வாய் துர்நாற்ற பிரச்சனையை சந்திக்கும் பலர் மற்றவர்களின் அருகில் சென்று பேச கூட சங்கடப்படுவார்கள். ஏன் தங்கள் வாழ்க்கை துணைக்கு ஒரு முத்தம் கூட கொடுக்க யோசிப்பார்கள்.
வாய் துர்நாற்றத்திற்கான பொதுவான காரணங்கள் நாக்கில் உள்ள வெள்ளைப் படலம், பல் சொத்தை, ஈறு நோய்கள் மற்றும் போதுமான வாய் சுகாதாரம் இல்லாமை போன்றவையாகும். இந்த வாய் துர்நாற்ற பிரச்சனையைத் தடுக்க தற்போது பல்வேறு வாய் பராமரிப்பு பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த பொருட்களில் கெமிக்கல்கள் இருப்பதால், சிலருக்கு இந்த பொருட்கள் சேராமல் இருக்கலாம். ஆனால் நமது வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களே நமது வாயில் வீசும் துர்நாற்றத்தைப் போக்க உதவும். கீழே வாய் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்ல வைக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தண்ணீர் ஒருவர் போதுமான அளவு நீரை அருந்தாமல் இருக்கும் போது, வாய் வறட்சி ஏற்பட்டு, வாயில் துர்நாற்றம் வீசத் தொடங்கும். எனவே நீங்கள் உங்கள் வாய் துர்நாற்றமின்றி இருக்க நினைத்தால், தினமும் நிறைய தண்ணீரைக் குடிக்க வேண்டும். தண்ணீரை அதிகம் குடிங்கும் போது, வாய் வறட்சி தடுக்கப்பட்டு, வாயும் ஆரோக்கியமாக பராமரிக்கப்பட்டு, வாய் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.
தயிர் தயிரில் நன்மை விளைவிக்கும் லேக்டோபேசில்லஸ் என்னும் பாக்டீரியா காணப்படுகிறது. இந்த ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் வயிற்றுக்கு வெளியே உள்ள கிருமிகளை விரட்ட உதவுகிறது. ஆனால் நீங்கள் சாப்பிடும் தயிரில் சர்க்கரை எதுவும் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். எனவே நீங்கள் உங்கள் வாய் துர்நாற்றத்தை தடுக்க நினைத்தால், தினமும் ஒரு கப் தயிரை சாப்பிடுங்கள்.
நாக்கை சுத்தம் செய்வது தினமும் பற்களைத் துலக்குவதனால் மட்டும் வாய் துர்நாற்றத்தை தடுக்க முடியாது. பற்களைத் துலக்குவது போன்றே நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும். சொல்லப்போனால் நாக்கில் படியும் வெள்ளை படலத்தை நீக்காமல் இருப்பதனாலும், வாய் துர்நாற்றம் வீசும். எனவே வாய் துர்நாற்றத்தைத் தடுக்க தினமும் நாக்கை சுத்தம் செய்யும் வழக்கத்தைக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment