Search

சூரிய ஒளியில் இத்தனை நன்மைகள் கிடைக்கிறதா..? இனியும் ஓடி மறையாதீங்க..!

 பூமியில் உள்ள உயிர்களின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதில் சூரிய ஒளி முக்கிய பங்கு வகிக்கிறது என்பது பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். அதுமட்டுமல்லாது, மனிதர்களின் ஆரோக்கிய தன்மைக்கும் சூரிய ஒளி பெரிதும் உதவுகிறது. இருப்பினும், சூரியனில் இருந்து வரும் அதிகப்படியான புற ஊதா கதிர்வீச்சு தோல் புற்றுநோயை ஏற்படுத்தும். ஆனால், சூரிய ஒளியில் குறிப்பிட்ட அளவு நேரத்தை செலவிடுவது நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், மக்கள் அதிக சூரிய ஒளியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வது மிகவும் அவசியமானது போலவே, சூரிய ஒளியின் ஆரோக்கிய நன்மைகளைப் பெறுவதற்கும் போதுமான அளவு அதில் நேரத்தை செலவிட வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த போதுமான அளவு வைட்டமின் டி அளவை பெற வேண்டும். சூரிய ஒளியின் முக்கிய பயன்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வைட்டமின் டி அளவு : வைட்டமின் டி உடலில் பல முக்கிய செயல்பாடுகளை செய்கிறது. இது உடலின் வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் செல் பெருக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. இதை மாத்திரைகள் போன்று தனியாக சாப்பிடுவதால் போதுமான அளவு கிடைப்பது கடினம் என்றாலும், சூரியனிடம் இருந்து வைட்டமின் டி இயற்கையாக கிடைக்கிறது. மேலும் இதன் பலன்களைப் பெற வாரத்திற்கு சில முறை 5-15 நிமிடங்கள் சூரிய ஒளியை நேரடியாக நேரத்தை செலவிடுங்கள். 15 நிமிடங்களுக்கு மேல் வெளியே இருக்கப் போகிறீர்கள் என்றால் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி : உங்கள் நோயெதிர்ப்பு அமைப்புக்கு வைட்டமின் டி முக்கியமானது, மேலும் சூரிய ஒளியை தொடர்ந்து பெறுவதால் வைட்டமின் டி-யை அதிகரிக்க முடியும். ஒரு வலுவான நோயெதிர்ப்பு அமைப்பை பெறவும், அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்கவும் வைட்டமின் டி பெரிதும் உதவும்.

எலும்புகளின் வலிமைக்கு : சூரிய ஒளியில் நாம் இருக்கும் போது, நம் உடல்கள் வைட்டமின் டி-ஐ உற்பத்தி செய்கிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருந்தாலே போதுமானது. மேலும், வைட்டமின் டி உங்கள் உடலில் கால்சியத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும் உடையக்கூடிய, மெல்லிய அல்லது சிதைந்த எலும்புகளின் பாதிப்புகளில் இருந்து தடுக்கிறது. சூரிய ஒளியில் சிறிது நேரத்தை செலவிடுவது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முக்கிய வழியாகும்.

மனச்சோர்வு : மனசோர்வு எல்லோருக்கும் இருக்க கூடிய பாதிப்பாகும். ஆனால், இந்த பாதிப்பில் இருந்து வெளியேற சூரிய ஒளி உதவுகிறது. இது உங்களை நன்றாக உணர வைக்கிறது என்பதற்கான அறிவியல் ஆதாரம் உள்ளது. சூரிய ஒளி உங்கள் உடலில் செரோடோனின் அளவை உயர்த்துகிறது, மேலும் இது உங்கள் மனநிலையை மேம்படுத்தும் ஹார்மோன் உற்பத்திக்கும் வழிவகுக்கிறது. உங்களை நிதானமாகவும், அமைதியாகவும் இருக்க சூரிய ஒளி உதவுகிறது.

உடல் எடை குறைப்பு : 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, எடை குறைப்பு என்பது காலை 8 மணி முதல் மதியம் வரை  30 நிமிடங்கள் உடலில் சூரிய ஒளி படுவதால் உடல் எடை குறைக்க பெரிதும் உதவும் என கண்டறிந்துள்ளனர். மேலும், அதிகாலை சூரிய ஒளிக்கும் எடை குறைப்புக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஆய்வு செய்துள்ளனர். இதுவும் எடை குறைப்பில் நல்ல விளைவுகளை தருகிறது.

நீண்ட ஆயுள் : ஜர்னல் ஆஃப் இன்டர்னல் மெடிசினில் வெளியிடப்பட்ட 30,000 ஸ்வீடிஷ் பெண்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சூரிய ஒளியில் அதிக நேரம் செலவழித்தவர்கள், குறைவான அளவு சூரிய ஒளியில் இருந்தவர்களை விட 6 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை அதிகமாக வாழ்ந்ததாகக் கண்டறிந்துள்ளது. இது பலருக்கும் சூரிய ஒளியின் முக்கியவத்துவதை உணர்ந்த கூடும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment