கால்சியம் சத்தானது, உடல் வளர்ச்சிக்கும், எலும்புகளின் உறுதிக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. தசைகளின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கு கால்சியம் அதிகம் தேவைப்படுகிறது. கால்சியம் சத்து குறைந்தால் எலும்புகள் பலமிழந்து போகும் என்பது பரவலாக அனைவருக்கும் தெரிந்த உண்மை. வலிமையான மற்றும் ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களுக்கு கால்சியம் மற்றும் விட்டமின் டி ஆகிய இரண்டு ஊட்டச் சத்துகளும் அவசியம் ஆகும். விட்டமின் டி எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும்.
கால்சியம் சத்து குறைவதால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. கால்சியம் குறைபாட்டால் குறைவதால் இரத்த ஓட்டம் சீர்குலைகிறது. இரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் தன்மை குறைவதால் இரத்த அழுத்தம் உண்டாகிறது. இதயத்திற்கு சீராக இரத்தம் செல்வதில்லை. இதனால் இதயநோய்கள் உண்டாகிறது இப்படி பல நோய்கள் ஏற்படும் அபாயத்தை கொண்டிருக்கிறது கால்சியம் குறைபாடு.
ஆனால், நோய் ஏற்படும் அபாயம் ஒரு புறம் என்றால், கால்சியம் குறைபாடு ஆரோக்கியத்தை குலைக்கும். நமது உடலில் எலும்புகள் வலுவுடன் இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் பல நேரங்களில் நாம் செய்யும் தவறுகளால், நாமே நமது எலும்புகளை சேதப்படுத்துகிறோம். எலும்புகளுக்குத் தேவையான கால்சியத்தை குறைக்கும் வேலைகளை நாமே செய்கிறோம். நாம் செய்யும் என்னென்ன விஷயங்கள் நமது உடலின் கால்சியத்தை காலி செய்கின்றன என்பது தெரியுமா?
தேநீர் மற்றும் காபி
இந்தியாவில் டீ, காபி அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு பஞ்சமே இல்லை, நம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் விழிப்பதே, காபி அல்லது தேநீர் போன்ற பானங்களில் தான். அவற்றில் காபி, கால்சியத்தை குறைக்க காரணமாகிறது என்பது தெரியுமா? நமது உடலில் உள்ள எலும்புகளின் அடர்த்தியை குறைப்பதில் காபிக்கு முக்கியப் பங்கு உள்ளது. எனவே முடிந்தவரை காபி அருந்துவதைத் தவிர்க்கவும்.
இனிப்பு உணவு
இனிப்புகளை சாப்பிடுவது சர்க்கரை நோயை அதிகரிக்கும் என்று பொதுவாக நாம் நினைக்கிறோம், ஆனால் சர்க்கரை நுகர்வு என்பது நம் எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். அதனால்தான் சர்க்கரை அல்லது அதிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களை குறைந்த அளவில் சாப்பிடுங்கள் என மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் அறிவுறுத்துகின்றனர்.
மதுபானம்
ஆல்கஹால் பல நோய்களை ஏற்படுத்துவது மற்றும் ஆரோக்கியத்தை குலைக்கும் பண்புகளைக் கொண்டது என்பது தெரியும். ஆனால், மது அருந்துவது எலும்புகளுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் கருதப்படுகிறது. மது அருந்துவதால், எலும்புகளின் வளர்ச்சி நின்று, எலும்பின் அடர்த்தியும் குறையத் தொடங்குகிறது, எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
அதிக உப்பு பொருட்கள்
அதிக சோடியம் நமது எலும்புகளுக்கு தீங்கு விளைவிப்பதால், ஆஸ்டியோபோரோசிஸ் நோயின் ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது. இதில், எலும்புகள் மெல்லியதாகவும் பலவீனமாகவும் மாறும், இதன் காரணமாக எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே சிப்ஸ், பிரெஞ்ச் ஃப்ரைஸ், ஊறுகாய் போன்ற உணவுகளை அதிகம் உண்பதை தவிர்ப்பது நல்லது.
சோடா பானம்
செரிமானத்திற்கு என்றும், சுவைக்காகவும் குளிர்பானங்களை அருந்துகிறோம், ஆனால் சோடா கலந்த குளிர்பானங்கள் நமது எலும்புகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துகின்றன, பழச்சாறுகள் அடங்கிய இயற்கை பானங்களை மட்டும் குடிப்பது நல்லது.
0 Comments:
Post a Comment