குளிர்காலத்தில் தான் பலரும் பல்வேறு வித தொற்று நோய்களுக்கு ஆளாகும் வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது. பொதுவாக ஏற்படும் நோய்களான காய்ச்சல், சளி, இருமல் ஆகியவை குளிர் காலங்களில் மிக அதிகமாக பரவுகின்றன. நமது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதும் இதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. எனவே நோய் தொற்றுக்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டியது அவசியம். ஆயுர்வேத மருத்துவ முறையில் நமது நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறு அதிகரிப்பது என்பதை பற்றி பார்ப்போம்.
ஆரோக்கியமான செரிமான மண்டலம் : நமக்கு செரிமான மண்டலத்தில் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதன் மூலமே பல்வேறு விதமான நோய் தொற்றுகளில் இருந்து விடுபட முடியும் என ஆயுர்வேத மருத்துவம் நம்புகிறது. இதில் நமது உடலின் ஜீரண சக்தியானது அக்னி என அழைக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக உண்பதும் அல்லது குறைவாக சாப்பிடுவதும் ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களை உட்கொள்வதும் நமது உடலின் செரிமான சக்தியை குறைத்து விடும். செரிமான சக்தி குறையும் போது உடலில் நச்சுக்கள் சேர்ந்து பல்வேறு விதமான நோய்கள் ந்டாவதற்கு காரணமாகின்றன.
ஆயுர்வேத உணவுப் பொருட்கள் : எனவே நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு முதலில் நமது செரிமான மண்டலத்தை வலிமையாக்க வேண்டும். மேலும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களையும் நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஆயுர்வேத மருத்துவத்தின் அறிவுரையின்படி கீழ்க்கண்ட பொருட்கள் நமது உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். நெல்லிக்காய், நெய், அல்லது வெண்ணெய், வெல்லம், துளசி இலைகள், மஞ்சள் மற்றும் இஞ்சி ஆகியவை நமது அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மூலிகை தேநீர் : ஆயுர்வேத மருத்துவத்தில் மூலிகை தேநீர் அருந்தும் பழக்கமானது பழங்காலத்திலிருந்து இருந்து வருகிறது. முல்லேட்டி, துளசி, இலவங்கப்பட்டை, இஞ்சி, கிராம்பு, மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு ஆகியவை நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இவற்றினுடைய ஆன்ட்டி ஆக்சிடென்ட் தன்மையினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மட்டுமல்லாமல், நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கும் இவை உதவுகிறது. சுவாசக் குழாய்களில் உள்ள தொற்றுகளை நீக்குவதுடன் இளமையாக தோற்றமளிக்கவும் உதவுகிறது.
நாசியா தெரபி : ஆயுர்வேத மருத்துவத்தில் நாசியா தெரபி என்ற ஒரு சிகிச்சை முறை வழக்கத்தில் உள்ளது. சிறிதளவு எள் எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை நமது நாசி பாதையில் செலுத்தி இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ள பஞ்சகர்மா சிகிச்சை முறைகளில் இந்த நாசியா தெரப்பியும் ஒன்றாகும். குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு உணவு ஏதும் உட்கொள்ளாத போது இந்த சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட வேண்டும். ஒருவரை அமர வைத்து தலையின் பின்புறமாக நன்றாக சாய்த்தபடி அவரின் இரண்டு மூக்கு துவாரங்களிலும் நான்கு முதல் ஐந்து துளிகள் எண்ணெய் விடப்பட வேண்டும். இதன் மூலம் சைனஸ் போன்றநோய்கள் ஏற்படாமலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் செய்கிறது.
ஆயில் புல்லிங் தெரபி : உடலுக்குள் செல்லும் பல்வேறுவது கிருமிகளும் பொதுவாக நமது வாய் வழியாகவே செல்லுகின்றன. இதன் காரணமாகவே நமது வாயை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்படும் ஆயில் புல்லிங் என்ற சிகிச்சை முறையில் தேங்காய் எண்ணெய், எள் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து அவற்றை சிறிதளவு நமது வாயில் வைத்து, நன்றாக கொப்பளித்து பின் துப்பி விட வேண்டும். இதன் மூலம் நமது வாயில் உள்ள கிருமிகள் முழுவதும் நீக்கப்பட்டு ஆரோக்கியமாக இருக்கலாம்.
No comments:
Post a Comment