உடல் எடையை குறைக்க பின்பற்றும் பல வழிமுறைகளில் யோகா சிறப்பான ஒன்று. குறிப்பிட்ட சில யோகாசனங்களை தொடர்ச்சியாக செய்வதன் மூலம் உடலில் கூடுதல் எடை கொண்ட பகுதிகளில் உள்ள கொழுப்புகளை கரைக்கலாம். எவ்வளவு முயன்றாலும் உடலில் கொழுப்பு குறையாமல் பாடாய படுத்துவது தொப்பை. வயிற்று பகுதியில் இருக்கும் அதிக கொழுப்பை எரிக்க உதவும் சில யோகாசனங்கள் மிகவும் சிறப்பான, வியக்கத்தக்க பலன்களக் கொடுக்கும்.
நம்மை ஆரோக்கியமாக வைத்திர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதோடு தொடர்ந்து யோகா செய்வதால் மன அமைதியும், தன்னம்பிக்கையும் கிடைக்கும். யோகா உடலை வலுவாகவும், பிட்டாகவும் மாற்ற உதவுகிறது. அந்த வகையில், தொப்பையை குறைக்கும் ஆசனத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
உத்தன் பதாசனம்
உத்தன் பதாசனம், தொப்பை குறைக்க பெரிதும் உதவுகிறது.
உத்தன் பதாசனம் செய்யும் முறை
முதலில் சமதளமான இடத்தில் படுத்துக் கொள்ளுங்கள். இப்போது இரண்டு கால்களையும் ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு காலை மேலே தூக்கவும். கால்கள் இரண்டையும் சேர்த்து 30 டிகிரி வரை உயர்த்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்போது இப்படியே சிறிது நேரம் கால்களை உயர்த்தி வைத்து மெதுவாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விடவும். 30 வினாடிகளுக்குப் பிறகு, ஆழமாக மூச்சை வெளியேற்றிக் கொண்டே, கால்களை மீண்டும் கீழே கொண்டு வாருங்கள். பின்னர் சற்று ஆசுவாசம் செய்து கொண்டு மீண்டும் இந்த ஆசனத்தை முயல வேண்டும்.
இம்முறை கொஞ்சம் அதிக நேரம் பாதங்களை உயரத் தூக்கி வைக்கப் பழகலாம். இந்த ஆசனம் செய்வது உண்மையில் கடினமான இருக்கும். நன்கு செங்குத்தாக 90 டிகிரி கோணத்தில் தூக்குவது எளிது. ஆனால், அவ்வாறு தூக்காமல் தரையிலிருந்து 30 டிகிரி கோணத்தில், அதாவது ஒன்றரை அடிக்கு மேல் தூக்கி, அதே நிலையில் சில நொடிகள் வைத்திருப்பதும் எளிதல்ல. அவ்வாறு செய்யும் போது அடி வயிற்றில் நடுக்கம் வருதைப் போல் உணரலாம்.
உத்தன் பாதாசனத்தின் பலன்கள்
இந்த ஆசனம் செய்வதன் மூலம் தொப்பை குறையும். அதனை தொடர்ந்து பயிற்சி செய்வது வயிற்று வலிக்கு நிவாரணம் அளிக்கிறது. செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். தொப்புளை சமநிலைப்படுத்துவதில் இந்த ஆசனம் மிகவும் முக்கியமானது. மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குகிறது. இந்த ஆசனத்தின் மூலம் முதுகுவலியும் நீங்கும்.
உத்தான பதாசனம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்
இந்த ஆசனத்தை எப்போதும் வெறும் வயிற்றில் செய்யுங்கள். முதுகு வலி இருந்தால் இதை ஒருபோதும் செய்யாதீர்கள். வயிற்று அறுவை சிகிச்சை செய்தாலும் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது. கர்ப்பிணிகளும் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.
0 Comments:
Post a Comment