DRDO நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – ரூ.60,000/- ஊதியம் || தேர்வு கிடையாது! - Agri Info

Adding Green to your Life

January 1, 2023

DRDO நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – ரூ.60,000/- ஊதியம் || தேர்வு கிடையாது!

 

DRDO நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – ரூ.60,000/- ஊதியம் || தேர்வு கிடையாது!

DRDO – IRDE நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Consultant பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.60,000/- ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதம் உள்ளதால் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

DRDO நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:

Consultant பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே DRDO – IRDE நிறுவனத்தில் காலியாக உள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், R & D நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level-13A என்ற ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

இந்த DRDO – IRDE நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 63 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

Consultant பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.60,000/- + ரூ.5,000/- (Allowance) மாத சம்பளமாக தரப்படும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

இந்த DRDO – IRDE நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் director.irde@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நாளைக்குள் (02.01.2023) அனுப்ப வேண்டும்.

Download Notification PDF

No comments:

Post a Comment