தமிழ்நாடு அரசின் TNBB வாரியத்தில் Data entry Operator வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்! - Agri Info

Adding Green to your Life

January 7, 2023

தமிழ்நாடு அரசின் TNBB வாரியத்தில் Data entry Operator வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியத்தில் (Tamil Nadu Biodiversity Board) தற்காலிக அடிப்படையில் DATA ENTRY OPERATOR பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிவியல் பாடத்தில் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த பணி 4 மாதங்களுக்கு மட்டுமே. பின்னர் திறமையில் அடிப்படையில் பணிக்காலம் நீட்டிக்கப்படும். இப்பணிக்கு 3 இடங்கள் உள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதப் படிக்க மற்றும் பேச நன்கு தெரிந்திருக்க வேண்டும். MS Excel, Lower grade தட்டச்சு மற்றும் taxonomy பற்றி அறிவு தேவை.

கல்வித்தகுதி:

Data entry Operator பணிக்கு Botany/Zoology அல்லது அதற்கு நிகரான இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் முதல் கட்டமாகத் தேர்வு செய்து எழுத்துத் தேர்வு/ நேர்காணலுக்கு அழைப்பர்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://tnbb.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யhttps://tnbb.tn.gov.in/

முகவரி:

The Secretary,

Tamil Nadu Biodiversity Board,

TBGP Campus II Floor,

Nanmangalam, Medavakkam Post,

Chennai - 600100.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.01.2023.


No comments:

Post a Comment