தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணியில் அடங்கிய சாலை ஆய்வாளர் பணிக்கான 761 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் முறையில் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கீழ் சாலை ஆய்வாளர் பணி இடம்பெறுகிறது. இப்பணிக்கான அரசாங்க குறியீடு எண் 3245. இப்பணிக்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் |
சாலை ஆய்வாளர் | 761 | ரூ.19,500-71,900/- |
வயது வரம்பு:
SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s,BCMs and Destitute widows பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. இதர பிரிவினருக்கு அதிகபட்சம் 37 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
Civil Draughtsmenship பாடத்தில் ஐடிஐ சான்றிதழ் கண்டிப்பாகப் பெற்றிருக்க வேண்டும். Civil Engineering பிரிவில் டிப்ளமோ பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் https://www.tnpsc.gov.in/என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://apply.tnpscexams.in/
முக்கிய நாட்கள்:
நிகழ்வுகள் | நாட்கள் |
விண்ணப்பிக்கக் கடைசி நாள் | 11.02.2023 |
இணையவழி விண்ணப்பத்தைத் திருத்தம் செய்ய | 16.02.2023-18.02.2023 |
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் | 07.05.2023 |
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment