TN Private Josb: தமிழ்நாட்டில் பல்வேறு தொழிற்பிரிவுகளின் கீழ் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் யாருடைய உதவியும் இல்லாமல், இதற்கு விண்ணப்பித்து பயன் பெறலாம்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த இணையதளம் மூலம் தனியார் நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகளைத் தேடலாம். அதேபோன்று, வேலை அளிக்கும் நிறுவனங்கள், இந்த இணைய தளத்தில் பதிவு செய்து உங்கள் நிறுவனத்துக்கு ஏற்ற தகுதியான மனித வளத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம். சமீபத்திய விவரங்களின் படி, கிட்டத்தட்ட 42 தொழிற் பிரிவுகளின் கீழ் 116,025 பணிக் காலியிடங்கள் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன
www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையப் பக்கத்திற்கு செல்லவும். முகப்புப் பக்கத்தில், வேலைதேடுபவர் என்பதை தேர்வு செய்து உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும். அதில், புதிய கணக்கை உருவாக்குக என்பதன் கீழ், பெயர், தந்தையின் பெயர், மின்னஞ்சல், கைபேசி எண், ஆதார் எண், கடவுச்சொல் ஆகிய விவரங்களை உள்ளிட வேண்டும்
இறயாக, மின்னஞ்சல்/கைபேசி எண் மற்றும் கடவுச் சொல் பயன்படுத்தி உங்கள் தனிப்பட்ட பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
No comments:
Post a Comment