தமிழகத்தில் பிப். 11ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – வெளியான அப்டேட்!!
தமிழகத்தில் உள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற பிப்.11ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு தொழில்நெறி மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களும் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது, அந்த வகையில் வருகிற பிப். 11 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.
அதில் 150க்கு அதிகமான தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும், அவர்கள் 20,000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த முகாம் சாணக்யா பள்ளியில் வருகிற 11 ஆம் தேதி காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெற இருக்கிறது. மேலும் இந்த முகாமில் கலந்து கொள்ள கல்வித்தகுதியாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, இளங்கலை முதுகலை படிப்பு முடித்தவர்கள், டிப்ளமோ, பொறியியல் படிப்பு முடித்தவர்களும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/162301310011 என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள இளைஞர்கள் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்
Click here for latest employment news
No comments:
Post a Comment