Search

11 ஆயிரம் காலியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே இந்த வாய்ப்பை விட்றாதீங்க!

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட 2023 ஆம் ஆண்டு தேர்வு திட்ட அட்டவணையில் குரூப் 2, 2ஏ காலிப்பணியிடங்கள் வெளியிடப்படவில்லை. மேலும், குரூப் 4  குரூப் 4 தேர்வுக்கான எழுத்துத் தேர்வு அடுத்தாண்டு தான் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு வேலைவாய்ப்பை பெறத் துடிக்கும் ஆயிரக்கணக்கான தேர்வர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இருப்பினும், இந்த ஆண்டில் நல்ல அரசு வேலையில் அமர்வதற்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, குரூப் 2, 2ஏ,4 தேர்வர்கள் கொஞ்சம் மனது வைத்தால், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட 11 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து வெற்றி பெறலாம். இதுநாள் வரையில், நீங்கள் பெற்றிராத நல்லதொரு வாய்ப்புகள் தற்போது உருவாகியிருக்கிறது.

என்ன வாய்ப்பு: 

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலியாகவுள்ள MTS (Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar Examination, 2022 ) பணியில் சேர்வதற்கான போட்டித் தேர்வினை அறிவித்துள்ளது. இந்த பதவிக்கு, குறைந்தது 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான, விண்ணப்ப செயல்முறை ஏற்கனவே தொடங்கியுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை (17ம் தேதி) நள்ளிரவு 11 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். தேர்வு வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் உடனடியாக விண்ணப்பியுங்கள்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்கு தயாராகி வரும் பெருமாபாலான தேர்வர்களுக்கு இந்தத் தேர்வு பற்றிய பெரிய விழிப்புணர்வு இருப்பதாய் தெரியவில்லை. குறைவானவர்கள் மட்டுமே மத்திய அரசு தேர்வுகளுக்கு விண்ணப்பித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.இதற்கு, முக்கிய காரணம் இந்தி மற்றும் ஆங்கில மொழில்களில் மட்டுமே இந்த தேர்வு இதுநாள் வரை நடத்தப்பட்டு வந்தது. ஆனால், தமிழ்நாடு அரசும், மாணவர்களும் கோரிக்கை வைத்திருந்தைஅடுத்து, தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் எழுதலாம் என்று எஸ்.எஸ்.சி தெரிவித்துள்ளது.

இதற்கான எழுத்துத் தேர்வு, வரும் ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் உடற் திறன் தேர்வில்  (Physical Efficiency Test) கலந்து கொள்ள வேண்டும்.

ஆங்கில மொழித் திறனுக்கு முன்னுரிமை கொடுங்கள்: பொது விழிப்புணர்வு (General Awareness), கணித அறிவு (Numerical and Mathematical Ability), காரணங்கானல் (Logical Reasoning), ஆங்கில மொழித்திறன் மற்றும் தொடர்பாடல் ஆற்றல் (English Language and Comprehension) ஆகிய நான்கு தலைப்புகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.  ஆங்கில மொழித்திறன் பகுதிக்கு மட்டும் சற்று அதிகபட்ச முன்னுரிமை தந்தால், இந்த தேர்வை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது.

இலவச பயிற்சி உண்டு: 

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கி வரும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி, இந்த SSC பணியிடத்திற்கு Youtube (aimtn)காணொலி வகுப்புகளை அறிவித்துள்ளது. தேர்விற்கான பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துத் தலைப்புகளிலும் வல்லுநர்களைக் கொண்டு பாடங்கள் நடத்தப்படவுள்ளன. நாளொன்றுக்கு மூன்று காணொலிகள் என்ற அளவில் 60 நாட்களில் அனைத்துக் காணொலிகளும் பதிவேற்றம் செய்யப்படவுள்ளன.

மாணவர்கள் அனைவரும் மாதிரித் தேர்வுகளை எழுத விரும்புவதால் சுமார் 30 தேர்வுகளையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் அனைத்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள உனக்குள் தேடு' என்ற செயலியின் வழியாக உடனுடக்குடன் திருத்தப்பட்டு மாணவர்களுக்குத் திரும்ப வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment