நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இயங்கிவரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் உள்ள புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்தை தொகுப்புதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்ச வயது 40 ஆக உள்ளது.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | வயது | சம்பளம் |
புறத்தொடர்பு பணியாளர் | 1 | அதிகபட்சம் 40 | ரூ.10,592/- |
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல தகவல் தொடர்பு திறன் மற்றும் களப்பணியில் அனுபவமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் https://www.nagapattinam.nic.in/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து உரியச் சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
அறை எண்.209, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
நாகப்பட்டினம் - 611003.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 08.03.2023 மாலை 5.45 மணி வரை.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
Click here for latest employment news
No comments:
Post a Comment