TNSTC Kumbakonam Driver Recruitment 2023: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட்-ல் காலியாக உள்ள 122 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 8358 ஓட்டுநர் எண்ணிக்கையில், 31.07.2022 அன்றைய நிலவரப்படி ஓட்டுநர் எண்ணிக்கை 8136 ஆக உள்ளது. 222 காலி இடங்களில், 203 பேர் விரைவாக பணியமர்த்தப்பட வேண்டும் என்று போக்குவரத்துத் துறை வாரியம் (STU Board) ஒப்புதல் அளித்து இருந்தது.
இந்த காலி இடங்கள் நிரப்புதல் குறித்து, முதன்மைச் செயலாளர் (போக்குவரத்துத் துறை), இதர போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் அரசு கூடுதல் செயலாளர் (நிதி ) நடத்திய ஆய்வு கூட்டத்தில், காலி இடங்களில் 60% இடங்கள் (122) நிரப்ப முடிவெடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு நேற்று (கும்பகோணம்) லிமிடெட்-ல் காலியாக உள்ள 122 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை வெளியிட்டது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மூலம் நியமனம் செய்ய தகுதியான நபர்கள் விண்ணப்பங்கள் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஊட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் (18 மாதங்கள் பூர்த்தியாகிருத்தல் வேண்டும்) உரிமை இருக்க வேண்டும். முதலுதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். உயரம் குறைந்த பட்சம் 160 செ.மீ, எடை குறைந்தபட்சம் 48 கிலோ இருத்தல் வேண்டும். கண் திறன் குறைபாடு இருக்கக் கூடாது. வயது வரம்பு 24 -40க்குள் இருக்க வேண்டும். பிசி/ எம்பிசி/எஸ்சி/எஸ்டி பிரிவினர் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
செய்முறைத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
ஊதிய விகிதம்: ரூ.17,500 முதல் ரூ. 56,200 வரை
முன் அனுபவம்: 18 மாதங்களுக்கு குறையாமல் கன ரக வாகனங்களை ஓட்டியமைக்கான அனுபவம் இருக்க வேண்டும்.
தெரிவு முறை: மேலாண்மை இயக்குனர் தலைமையிலான தேர்வுக்குழு,வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்கும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.
Click here for latest employment news
No comments:
Post a Comment