அடுத்த 3 ஆண்டுகளில், நாடு முழுவதும் வேலை பழகும் இளைஞர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாதம் ரூ. 1500/- வரை உதவித்தொகையின் வழங்கப்படும் திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த 2016ம் ஆண்டு, தேசிய தொழில் பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவித்தது. தொழிற்சாலைகளில் வேலை பழகுநர்கள் (Apprentice) சேர்க்கையை அதிகரிப்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்கும் நிறுவனங்களுக்கு, ஒவ்வொரு மாதமும் நபர் ஒன்றுக்கு ரூ.1500க்கு மிகாமல் (அல்லது வழங்கப்டும் ஊதியத்தில் 25%) பங்கிட்டுத் தொகையாக மத்திய அரசு அளித்து வந்ததது. மாதத்திற்கு ரூ.7,500க்கு மிகாமல் ஊதியம் வழங்கும் நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜுலை மாதம், இந்த திட்டத்தை நேரடி பயனாளிகள் பரிமாற்ற திட்டத்தின் (Direct Beneficiary Transfer (DBT) scheme) ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தியது. இந்த புதிய முறையின் மூலம், மத்திய அரசு தனது பங்களிப்பு நிதியான ரூ.1500 உதவித் தொகையை, வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கு பதிலாக, வேலை பழகுநர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வழங்கப்படும் என்று அறிவித்தது. முன்னோடியாக, சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் செயல்படுத்தி வந்த புதிய நடைமுறையை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார். இதன், மூலம் நாடு முழுவதும் 47 லட்சம் வேலை பழகும் இளைஞர்கள் பலனடைய உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
Click here for latest employment news
No comments:
Post a Comment