சென்னை: சென்னையில் பிப். 17-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இதில் 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன என சென்னை மாவட்டஆட்சியர் சு.அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னையில் அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து பிப்.17-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமைநடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் கிண்டி, ஆலந்தூர்சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது
இம்முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ்-2, ஐடிஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகியகல்வித் தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம்.
இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வுசெய்ய உள்ளன. இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை. இதில் கலந்துகொள்பவர்கள் தங்களது விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Click here for latest employment news
No comments:
Post a Comment