நாமக்கல்: ராசிபுரத்தில் வரும் 18-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், 10,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இது தொடர்பாக நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது.
முகாமில், 5-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தவர்கள் மற்றும் டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகள், கணினி பயிற்சி, தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்ளிட்ட பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம். முகாமில், பங்கேற்கும் அனைத்து வேலை நாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
முகாம் முற்றிலும் இலவசமானது. முகாமில், 200-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்குத் தேவையான ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளன. வேலை வேண்டி விண்ணப்பிப்போர், தங் களுடைய சுய விவரம், உரிய கல்விச் சான்றுகள் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
வேலையளிப்போரும், வேலைநாடுநர்களும் முகாம் தொடர்பான விவரங்களை அறிய 04286 222260 என்ற தொலைபேசி எண் மற்றும் 63822 92645 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
Click here for latest employment news
No comments:
Post a Comment