ரிஸ்க் இல்லாத நிரந்த வருமானம் தேவை நினைப்பவர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு இது பொற்காலம் என்றே சொல்லாம். வழக்கமாக தனியார்கள் வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்தான் டெபாசிட்டு அதிக வட்டி வழங்கும். ஆனால் தற்போது தனியார் வங்கிகள் மட்டும் இல்லாமல் பொதுத்துறை வங்கிகளும் ஃபிக்ஸ்ட் டெபாசிட்டு அதிக வட்டி வழங்க தொடங்கி உள்ளன. யார் அதிக வட்டி வழங்குவது என்ற போட்டில் வங்கி அல்லாத நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக அதிக வட்டி வழங்குகின்றன. தினமும் டெபாசிட் வட்டி உயர்வு குறித்த தகவல்கள் அப்டேட் ஆகி கொண்டே இருக்கின்றன. டெபாசிட் செய்வதற்கு முன்பு என்னென் விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதை பார்ப்போம்
டெபாசிட் மீதான வட்டி விகிதம் எவ்வளவு என்பதையும் கவனிப்பது அவசியம். முதலீட்டின் கால அளவுக்கு ஏற்ப வட்டி விகிதம் இருக்கும். வட்டி விகிதத்தை வைத்து மட்டும் இல்லாமல் அந்த வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனம் கடந்த காலங்களில் எப்படி செயல்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். முதலீடு மீதான வட்டி எப்படி உங்களுக்கு தேவை என்பதையும் முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டும். அதாவது காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதம் உங்கள் வங்கி கணக்கீல் வரவு வைக்கப்படும். ஆண்டுக்கு ஒருமுறையும் வட்டி விகிதம் கிடைக்கும். ஆண்டுக்கு 10,000 ரூபாய்க்கு அதிகமாக வட்டி வருமானம் கிடைக்கும் போது அதற்கு வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும்.
டெபாசிட் முதலீட்டு காலம் முடிவதற்கு முன்பே டெபாசிட்டை திரும்ப பெறும் போது சில வங்கிகள் அதற்கு கட்டணம் விதிக்கின்றன. அதாவது தவிர்க்க முடியாத காரணத்தினால், ஃபிக்ஸட் டெபாசிட் காலம் முதிர்வடைதற்கு முன்பே எடுக்கும் போது அபாரதம் இருக்கும். இந்த அபாரதம் எவ்வளவு என்பதையும் தெரிந்து வைத்து கொள்வது நல்லது.
வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் முதலீடு செய்யும் போது அதற்கான ரேட்டிங் என்ன என்பதையும் கவனிக்க வேண்டும். ஏஏஏ ரேட்டிங் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். கிரேடிட் ரேட்டிங் பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. ICRA,CRISIL உள்ளிட்ட நிறுவனங்கள் ரேட்டிங் வழங்கி வருகின்றன.
No comments:
Post a Comment