தற்போதைய நவீன கால வாழ்க்கை முறையில் நம்மில் பெரும்பாலானோர் தினசரி கம்ப்யூட்டர்ஸ், டேப்லெட்ஸ், டிவி அல்லது மொபைல் என எலெக்ட்ரானிக் டிவைஸ்களை பல மணி நேரம் பயன்படுத்துகிறோம். டிஜிட்டல் டிவைஸ் ஸ்கிரீன்களில் அதிக நேரம் செலவழிப்பது கண்புரை, குளுக்கோமா, கண்கள் உலர்தல், மோசமான நைட் விஷன் மற்றும் பிற கண் கோளாறுகளை ஏற்படுத்த கூடும்.
கண் சார்ந்த கடுமையான சிக்கல்களை தவிர்க்க விரும்பினால் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் , வைட்டமின்ஸ், ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை டயட்டில் சேர்க்க வேண்டும். சமச்சீரான மற்றும் ஆரோக்கியமான டயட் கண் ஆரோக்கியத்தை பராமரிக்க மற்றும் கண் தொற்றுகளில் இருந்து தற்காத்து கொள்ள உதவும்.
நீங்கள் டயட்டில் இருப்பவர் அதிகம் மென்று திங்கும் உணவுகளை சேர்த்து கொள்ள விரும்பவில்லை என்றால் சத்தான பழங்கள், காய்கறிகளில் இருந்து எடுக்கப்பட்ட ஜூஸை சேர்த்து கொள்ளலாம். ஆரஞ்சு முதல் இளநீர் வரை உங்கள் பார்வையை மேம்படுத்த உதவும் 5 ஆரோக்கியமான பானங்கள் இங்கே.
ஆரஞ்சு ஜூஸ் : ஆரஞ்சு ஜூஸ் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பானமாக இருக்கிறது. பழக்கடைகளில் எளிதில் கிடைக்க கூடியது. வைட்டமின் சி அதிகம் காணப்படும் பழங்களில் ஆரஞ்சு முக்கியமானது. இது கண்புரை உருவாவதற்கான அபாயத்தை குறைக்கிறது. கண்களின் ரத்த நாளங்களுடைய வலிமை மற்றும் நிலைத்தன்மையை பராமரிக்க ஆரஞ்சு ஜூஸ் உதவுகிறது. வயிற்றில் இருக்கும் கருவின் பார்வை வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான பி வைட்டமினான ஃபோலேட் ஆரஞ்சு ஜூஸிலும் உள்ளது.
ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஜூஸ் : இது ABC ஜூஸ் என்று குறிப்பிடப்படுகிறது. கேரட்டில் காணப்படும் வைட்டமின் ஏ நைட் விஷனை ஷார்ப்பாக வைத்திருக்க மற்றும் பொதுவாக கண்களை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது. பீட்ரூட்டில் காணப்படும் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் உள்ளிட்ட சத்துக்கள் மாகுலர் மற்றும் விழித்திரை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மறுபுறம் ஆப்பிளில் நிறைந்திருக்கும் பயோஃப்ளவனாய்ட்ஸ் பார்வை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பார்வையை அதிகரிக்கக்கூடிய ஊட்டச்சத்து நிறைந்த ஜூஸை நீங்கள் தேடி கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த ABC ஜூஸ் சிறந்தது.
ப்ரோக்கோலி, கீரை மற்றும் காலே ஜூஸ் : பச்சை இலை காய்கறிகள் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் வளமான மூலமாகும் மற்றும் ஆரோக்கியமான பார்வை திறனை பராமரிக்க முக்கியமானவை. ப்ரோக்கோலி, கீரை மற்றும் காலே ஜூஸ் கலவையில் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் இருப்பதால் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் பார்வை திறனில் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளை குறைக்க உதவுகிறது.
தக்காளி ஜூஸ் : கண்களுக்கு தேவையான எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் தக்காளி ஜூஸில் உள்ளது. தக்காளியில் உள்ள பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் பார்வை திறனை மேம்படுத்த உதவியாக இருக்கும். வயது தொடர்பான மாகுலர் சிதைவிலிருந்து பாதுகாக்கும் அத்தியாவசிய ஆன்டிஆக்ஸிட்டான லைகோபீன் தக்காளியில் உள்ளது.
இளநீர் : இளநீரில் வைட்டமின் சி மற்றும் பிற முக்கிய தாதுக்கள் மற்றும் அமினோ ஆசிட்ஸ் நிறைந்துள்ளன. இவை கண்களின் பாதுகாப்பு திசுக்களை (protective tissues) மேம்படுத்த உதவுகிறது. அடிக்கடி இளநீர் குடிப்பது Glaucoma (கண் அழுத்த நோய்) அபாயத்தை குறைக்கிறது. Glaucoma என்பது கண்ணின் பார்வை நரம்பை சேதப்படுத்தும் ஒரு நிலைமை ஆகும்.
0 Comments:
Post a Comment