கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நகர்புற சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களில் (Urban Health and wellness centre) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நிரப்பப்படும் இந்த பணியிடங்கள் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில்/ தற்காலிகமானதாகும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.02.2023 மாலை 5.00 மணி.
வரிசை எண் | பணியிட வகை | காலி பணியிடம் | வயது | சம்பளம் |
1 | மருத்துவ அலுவலர் | 49 | 45 வயது வரை | ரூ.60,000 |
2 | பல்நோக்குசுகாதாரப் பணியாளர்(சுகாதாரஆய்வாளர் நிலை–II ) | 49 | 35 வயது வரை | ரூ.14,0000 |
3 | சுகாதாரப் பணியாளர் | 49 | 45 வயது வரை | ரூ.8500 |
மருத்துவ அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், எம்பிபிஎஸ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
பல்நோக்குசுகாதாரப் பணியாளர் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுடன் 12ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இரண்டு வருட சுகாதாரப் பணியாளர்/சுகாதார ஆய்வாளர் ஆகிய பிரிவுகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சுகாதாரப் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இதற்கான, விண்ணப்பப் படிவத்தை, கோயம்பத்தூர் மாவட்ட https://coimbatore.nic.in/ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பம் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி:-
உறுப்பினர் செயலர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்
மாவட்ட நல்வாழ்வு சங்கம்
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்
219, பந்தய சாலை
கோயம்புத்தூர் – 641018.
தொலைபேசி எண்: 0422-2220351 ஆகும்.
Click here for latest employment news
No comments:
Post a Comment