ஐடிபிஐ வங்கியில், 600 உதவி மேலாளர் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை நாளையுடன் (Feb. 28 ) முடிவடைகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
காலிப் பணியிட விவரம்: 600. இவற்றில், பொதுப் பிரிவினருக்கு 244 இடங்களும், பட்டியல் கண்ட பிரிவினருக்கு 190 இடங்களும், பழங்குடியினர் இனத்தவருக்கு 17 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 89 இடங்களும், பொருளதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 60 இடங்களும், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி பிரிவினருக்கு 32 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி தேதி : பிப்ரவரி, 28.
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முன் அனுபவம்: வங்கி நிதி மேலாண்மை மற்றும் காப்பீடுத் துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01/01/2023 அன்று விண்ணப்பதாரர் வயது வரம்பு 21- 30க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.
தேர்வு முறை: இணைய வழி எடுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் தேர்வு, ஆட் சேர்ப்புக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை (Pre- Recruitment Medical Test) ஆகிய படிகளை கொண்டுள்ளது. எவ்வாறாயினும், எழுத்துத் தேர்வு, நேர்காணல் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.1000 ஆகும். பட்டியல் கண்ட பிரிவினர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் ரூ.200 செலுத்த வேண்டும்.
விண்ணப்பம் செய்வது எப்படி? இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். www.idbibank.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Recruitment of Assistant Manager (Grade "A") - 2023-24, Apply Online என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Click here for latest employment news
No comments:
Post a Comment