திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவமனை தர மேலாளர் பணிக்குத் தொகுப்பூதிய அடிப்படையில் மாதம் ரூ.60,000 ஊதியத்தில் தற்காலிகமாக நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 08.03.2023 ஆம் நாள் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கத் தேவையான முழு விவரங்கள் கீழ் வருமாறு.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | வயது | சம்பளம் |
மருத்துவமனை தர மேலாளர் | 1 | 45 | ரூ.60,000 |
கல்வித்தகுதி:
Hospital Administration பிரிவில் முதுகலைப் பட்டம் / Health Management பிரிவில் முதுகலைப் பட்டம் / Public Health பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உடையவர்கள் https://tiruppur.nic.in/என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து, கல்வி சான்றிதழ், அனுபவ சான்றிதழ் போன்றவற்றுடன் இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் deangmctpr@gamil.comஎன்ற மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம்.
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:
முதல்வர்
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
திருப்பூர் - 641 604.
இப்பணிக்கு 15.03.2023 அன்று மருத்துவமனை முதல்வர் அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
Click here for latest employment news
No comments:
Post a Comment