செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள 4 ஜீப்பு ஓட்டுனர்கள் (Jeep Drivers Recruitment) காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஜீப்பு ஓட்டுனர்கள் காலிப்பணியிடங்கள் தொடர்பான முக்கிய விவரங்கள் இங்கே:
வேலைவாய்ப்பு விளம்பர அறிவிப்பு | ந.க. எண்.1634/2021/uஅ4நாள்: 14.02.2023 |
பதவியின் பெயர் | ஜீப்பு ஓட்டுனர் |
காலியிடங்கள் | 4 |
சம்பளம் | அடிப்படை ஊதியம் - ரூ.19,500/-நிலை - 8(ரூ.19,500 - ரூ.62000/-) |
கல்வித் தகுதி மற்றும் இதர தகுதிகள் | 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்தகுதியான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்ஐந்து ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டியமைக்கான அனுபவம் பெற்றிருக்க வேண்டும். |
விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் | 08.03.2023 மாலை 5.45 மணி வரை |
வயது வரம்பு: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொது பிரிவு விண்ணப்பதாரர்கள் 18- 32க்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 42 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 34 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்,
விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம்(Call Letter)அனுப்பி வைக்கப்படும்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) அலுவலகத்திலும், செங்கல்பட்டு மாவட்ட www.chengalpattu.nic.in இணையதளத்திலும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்துடன் , சுயமுகவரியுடன் கூடிய ரூ.30/- அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் உறை இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), நூலக கட்டிடம் 2வது தளம், மருத்துவக் கல்லூரி வளாகம், செங்கல்பட்டு- 603 001 ஆகும்.
No comments:
Post a Comment