மனிதனின் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களும் உடல் இயக்கத்திற்கு ஏதாவது ஒரு வகையில் நிச்சயம் உதவக்கூடியதாக இருக்கும். இருந்தப் போதும் குடல் ஆரோக்கியம் என்பது மற்ற பாகங்களை விட கொஞ்சம் சிறப்பு வாய்ந்தது என்று கூறலாம். ஆம் மனித உடலில் சுமார் 40 டிரில்லியன் பாக்டீரியாக்கள் இருந்தாலும், பெரும்பாலான பாக்டீரியாக்கள் குடலில் தான் காணப்படுகின்றன. இதில் உள்ள நல்ல பாக்டீரியாக்களைக் காப்பாற்றுவதற்கும் கெட்ட பாக்டீரியாக்களை ஒழிப்பதற்கு குடல் ஆரோக்கியம் என்பது இன்றியமையாதது.
ஒருவேளை உங்களது குடல் சீராக இயக்கவில்லை என்றால், நோய் எதிர்ப்பு அமைப்பு குறைதல், மூளை ஆரோக்கியமின்மை மற்றும் தூக்கமின்மை போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மெடிக்கல் நியூஸ் டுடேயின் அறிக்கையின் படி, நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது ஒரு நபரின் குடல் நுண்ணுயிரியை மாற்றுவதற்கு கணிசமாக உதவும். மேலும் செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபது முதல் குடல் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்றால் கண்டிப்பாக நாம் நார்ச்சத்துள்ள காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதோ என்னென்ன காய்கறிகள் என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.
இலை காய்கறிகள் : நம்முடை உணவுமுறையில் காணப்படும் முக்கிய பச்சை இலை காய்கறிகளில் ஒன்று கீரை. இதில் ஃபோலேட், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் ஏ போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்குப் பேருதவியாக உள்ளது.
கேரட் : கேரட்டில் உள்ள அதிக நார்ச்சத்து மலச்சிக்கலில் இருந்து விடுபட உதவுகிறது. பச்சையாக கேரட்டை சாப்பிடுவது, பல உடல்நலப் பிரச்சனையை சீராக்க உதவும். இது தவிர, எலும்புகளை வலுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கண் பிரச்சனைகளுக்கும் கேரட் உதவுகிறது. இதுப்போன்று பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளதால் உங்களது உணவு முறையில் நீங்கள் கேரட்டை மறக்காமல் சேர்த்துக்கொள்ளவும்.
பீட்ரூட் : பீட்ரூட் அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளில் ஒன்று. இது செரிமான ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதோடு இது செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், மலச்சிக்கலைத் தடுப்பதன் மூலம் குடலில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க முடியும்.
அஸ்பாரகஸ் : நாம் அனைத்து காய்கறிக் கடைகளிலும் இதைப் பார்க்க முடியாது. மிகவும் அரிதானக் காய்கறிகளில் ஒன்று. ஆனால் இதில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்குப் பேருதவியாக உள்ளது. குறிப்பாக நல்ல வளமான நார்ச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன்கள், வைட்டமின் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், நல்ல செரிமானத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது. மேலும் இதில் இன்சுலின் எனும் கார்ப்போஹைட்ரேட் உள்ளது. இது உணவுப்பொருள்களில் உள்ள சத்துக்களை முழுவதுமாக உறிஞ்சுவதோடு, குடல் புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது.
பாகற்காய் : கசப்பான சுவையுடைய பாகற்காய் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஓர் காயாகும். அவை நோய்களை எதிர்த்துப் போராடும் பண்புகளை உடையது மேலும் உடல் வளர்ச்சிக்கு முக்கியமான பங்கு வகிப்பது மட்டுமல்லாமல் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன. இதை சாப்பிடுகையில் குடல் ஆரோக்கியம் மற்றும் மலச்சிக்கல் உள்ளிட்ட பல குடல் பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.
பிரஸ்ஸல்ஸ் முளைகள் : இதில் ஆன்டிஆக்ஸிடன்கள், வைட்டமின் கே உள்ளிட்ட சத்துக்களோடு அதிகளவு நார்ச்சத்துக்கள் இதில் அடங்கியுள்ளது. எனவே செரிமான பிரச்சனை ஏற்படாமல் பாதுகாப்பதோடு குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
ப்ரோக்கோலி : ப்ரோக்கோலியில் அதிக நார்ச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்துள்ளன. இவை இரண்டும் ஆரோக்கியமான குடல் செயல்பாடு மற்றும் செரிமான பிரச்சனையைத் தீர்க்கக்கூடிய ஊட்டச்சத்துள்ள காய்கறிகளி ஒன்று. எனவே உங்களது உணவு முறையில் இந்த காய்கறிகளை நீங்கள் பயன்படுத்தும்போது, இதில் நார்ச்சத்துக்களால் மலச்சிக்கல் பிரச்சனைக்குத் தீர்வாக அமைவதோடு, செரிமானப் பாதையும் பராமரிக்க உதவுகிறது.
No comments:
Post a Comment