வெயில் காலங்களை விட குளிர், காலங்களில் நம் உடலில் பலவித நோய் தொற்றுகள் உண்டாகும். அந்த வகையில், ஆரோக்கிய உணவுகளை குளிர் காலத்தில் எடுத்து கொண்டால் நோய் கிருமிகள் நம்மை அண்டாமல் தடுக்கலாம். குறிப்பாக வைட்டமின்கள், தாதுக்கள், நார்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற நம் உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஊட்டசத்துக்கள் நிறைந்தவற்றை சாப்பிட வேண்டும். இவை அனைத்துமே பேரீச்சம் பழத்தில் அதிகம் உள்ளன என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை குளிர் காலங்களில் சாப்பிட்டு வருவதால் எப்படிப்பட்ட நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கும் என்பதை பற்றி இனி அறியலாம்.
எலும்புகள் வலு பெற : குளிர் காலத்தில் சூரிய ஒளி நம்மீது குறைவாக படுவதால், உடலில் வைட்டமின் டி உற்பத்தி குறைவாக இருக்கும். எலும்புகளுக்கு வலு சேர்க்க வைட்டமின் டி பெரிதும் உதவுகிறது. எனவே பேரீச்சம் பழத்தை எடுத்துக்கொள்வதால் எலும்புகள் உறுதியாகும். மேலும் இப்பழத்தில் பொட்டாசியம், பாஸ்பரஸ், காப்பர் மற்றும் மெக்னீஷியம் நிறைந்துள்ளதால் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும். இதில் கால்சியம் சத்தும் அதிகம் உள்ளதால் பற்கள் வலுவாக இருக்க உதவும்.
மூட்டு வலி : குளிர் காலங்களில் மூட்டு வலி உள்ளோருக்கு இதன் பாதிப்பு மேலும் அதிகமாகும். பேரீச்சம் பழத்தில் மெக்னீஷியம் மற்றும் தசை வீக்கத்தை குறைக்கும் தன்மை உள்ளதால் மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றில் இருந்து நிவாரணம் தரும்.
மாரடைப்பு பாதிப்பை குறைக்கும் : உடலில் வெப்பநிலை குளிர் காலங்களில் குறைவதால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது. பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைத்து மாரடைப்பு மற்றும் அதிக இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கும். மேலும் இதை காலை மற்றும் மாலையில் ஸ்நாக்ஸ் போன்று சாப்பிட்டு வந்தால் குளிர் காலத்தில் ஏற்படும் மந்த தன்மை நீங்கும்.
வெதுவெதுப்பாக இருக்க செய்யும் : உடலுக்கு தேவையான வெப்பத்தை குளிர் காலங்களில் பேரீச்சம் பழம் தர உதவும். எனவே இதை சாப்பிடுவதால் உங்களை எப்போதும் வெதுவெதுப்பாக வைத்து கொள்ளலாம்.
ஆற்றல் தருபவை : பொதுவாக குளிர் காலங்களில் எந்நேரமும் மந்தமாகவும், சோர்வாகவும் இருப்போம். உங்களுக்கு உடனடி எனர்ஜியை தர சில பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டாலே போதும். மேலும் உடற்பயிற்சி செய்வதற்கு முன் இதை ஸ்நாக்ஸ் போன்று சாப்பிட்டால் உங்களுக்கு அதிக ஆற்றல் கிடைக்கும்.
இரும்புச்சத்து : இன்று பல பெண்கள் இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் அவர்களின் ஆரோக்கியம் பெரிதளவில் மாற்றம் அடைந்துள்ளது. எப்போதும் சோர்வாக இருப்பது, முடி கொட்டும் பிரச்சனை, குறைந்த எதிர்ப்பு சக்தி, மங்கிய தோல், கர்ப்ப காலத்தில் கருக்கலைப்பு உண்டாகும் அபாயம் போன்ற பாதிப்புகள் இரத்த சோகையினால் ஏற்படுகிறது. இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பேரீச்சம் பழம் பெரிதும் உதவும். எனவே இதை சாப்பிட்டு வருவதால் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும் மற்றும் கர்ப்பிணி பெண்களின் கரு வளர்ச்சிக்கும் இது உதவும்.
செரிமான பிரச்சனை : குளிர் காலத்தில் உடலின் செயல்பாடுகள் மெதுவாக நடப்பதால் நார்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் செரிமான பிரச்சனை உண்டாகாது. பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் செரிமானத்தை சீராக்குவதோடு, குடல் புற்றுநோய் பாதிப்பையும் குறைக்கிறது.
சருமத்திற்கு ஊட்டம் தரும் : பெரும்பாலும் குளிர் காலத்தில் தோலில் சுரக்க கூடிய இயற்கை எண்ணெய்யின் அளவு குறைந்து விடுவதால் சருமம் மிகவும் வறண்டு போகும். பேரிச்சம் பழத்தில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் தன்மை உள்ளதால், உங்கள் சருமத்தை இளமையாக வைக்க இது உதவும் மற்றும் செல்களின் பாதிப்பையும் குணமாக்கும். இவ்வளவு அற்புத பயன்களை தனக்குள் ஒளிந்திருக்கும் இந்த பேரீச்சம் பழத்தை, குளிர் காலங்களில் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள்.
இனிப்பு பலகாரங்கள் செய்யலாம் : பண்டிகை காலங்களில் நீங்கள் சர்க்கரைக்கு பதில் பேரீச்சம் பழம் சேர்த்து இனிப்பு பலகாரங்களை தயார் செய்யலாம். இதனால் உடலுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். உங்கள் பண்டிகையும் இனிப்புடன் நிறைவைடையும்.
No comments:
Post a Comment