குழந்தைகள் இயல்பாகவே கள்ளம் கபடமற்றவர்கள். கண்ணாடியை போன்றவர்கள். அவர்கள் மற்றவர்களிடம் பார்க்கும் மற்றும் கேட்கும் விஷயங்களை அப்படியே பிரதிபலிப்பவர். எனவே, அவர்கள் முன் நாம் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக செய்ய வேண்டும். அந்தவகையில், குழந்தைகள் முன் பெற்றோர்கள் செய்யக்கூடாத விஷயங்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துதல் : உங்கள் குழந்தையின் முன் நாகரீகமற்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். குழந்தைகளின் முன்பு நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள், அவர்களின் மனதில் ஆழமாக பதிந்துவிடும். எனவே, அதை அவர்கள் மற்றவர்களிடம் கூறுவதற்கான வாய்ப்பு அதிகம்.
குழந்தையின் முன் சண்டையிடுதல் : உங்கள் குழந்தையின் முன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். குழந்தையின் முன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது குழந்தையின் மன அமைதியை பாதிப்பதோடு, அவர்களை கடின உள்ளம் கொண்டவர்களாக மாற்றும். நாம் செய்யும் அனைத்து செயலையும் அவர்கள் அப்படியே வெளியுலகத்தில் பிரதிபலிக்கலாம்.
குழந்தையின் முன் மது / புகையிலை பழக்கம் : உங்கள் குழந்தைகளின் முன் மது அருந்துவது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை செய்ய வேண்டாம். ஏனென்றால், நமது குழந்தைகள் பல விஷயங்களை நம்மை பார்த்து கற்றுக்கொள்வார்கள். அதுமட்டும் அல்ல, நாம் தந்தை செய்யும் பழக்கம் சரி தான் என நம்ப நேரிடும். எனவே, குழந்தைகளின் முன் தீய பழக்கங்களில் ஈடுபட வேண்டாம்.
மற்றவரை பற்றி இழிவாக பேசுதல் : குழந்தைகளின் முன், மற்றவர்களை பற்றி தவறாகவோ அல்லது இழிவாகவோ பேச வேண்டாம். அப்படி செய்வதால், அந்த நபர் பற்றி, குழந்தைகள் தங்கள் மனதில் தவறான கருத்துக்களை வளர்த்துக்கொள்ள இயலும்.
மற்றவர்களுடன் ஒப்பிடுதல் : மற்றவர் முன் உங்கள் குழந்தைகளையோ அல்லது மற்றவர் பற்றி உங்கள் குழந்தைகளின் முன் ஒப்பிட்டு பேசுவது தவறான விஷயம். இவ்வாறு செய்வது அவர்களை மனதளவில் பாதிப்புக்கு உள்ளாக்கும். எனவே, உங்கள் குழந்தைகள் முன் அவன் அப்படி.. இவன் இப்படி என ஒப்பிட வேண்டாம். இது, குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.
எலக்ட்ரானிக் கேஜெட் பயன்பாடு : ஸ்மார்ட்போன், மடிக்கணினி, ஹெட்போன், வீடியோ கேம் போன்ற தொழில்நுட்ப சாதனங்களை குழந்தைகளின் முன் அதிகம் பயன்படுத்த வேண்டாம். இவ்வாறு பயன்படுத்துவது அவர்களை தனிமையாக உணர வைக்கும்.
மனைவியை துன்புறுத்தல் : குழந்தைகளின் முன் உங்கள் மனைவியை திட்டவோ அல்லது அடிக்கவோ வேண்டாம். ஏனென்றால், குழந்தைக்கு அவர் தாய். நீங்கள் அவரை அடிக்கடி திட்டினால், அவர் தனது தாயை கெட்டவராக நினைத்து விடுவார். இதனால், இவர்களுக்கு இடையிலான உறவு பாதிக்கப்படும்.
கடன் கேட்பது அல்லது வாங்குவது : குடும்பத்தில் நிதிச்சுமை இருப்பது இயல்பான ஒன்று. இருப்பினும், நிதிச்சுமையை போக்க நாம் நமக்கு தெரிந்த அல்லது நண்பர்களிடம் கடன் வாங்குவோம். அதை உங்கள் குழந்தையின் முன் செய்யாமல் இருப்பது நல்லது. ஏனென்றால், அவர்கள் அது நல்ல விஷயம் என அவர்கள் நினைக்க நேரிடும்.
No comments:
Post a Comment